பக்கம்:தமிழக வரலாறு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

தமிழக வரலாறு


சீமையில் காவேரிப்பட்டணம் மங்கலம் இருந்ததாகக் கல்வெட்டுக் குறிக்கிறது.[1]

கிராமங்கள் தனித்தனியே பாதுகாக்கப் பெற்றன. அலுவலர் பணிகளுக்காக வரியிலா நிலங்கள் விடப் பெற்றிருந்தன (கிராம மானியங்கள்). இக்காலத்தில் இருக்கும் பல கிராமப் பணியாளர் நிலங்களும், அவர்களுக்கு அக்காலத்தில் விடப்பெற்ற நிலங்களே. கிராமத்தில் நாட்டாண்மைகள், கர்ணம், காவற்காரன், தண்ணிர் அட்டுவாள் (நீர் கட்டி), தட்டான், கருமான், தச்சன், அம்பட்டன், வண்ணான் போன்ற பணியாளர்களுக்கு நிலங்கள் விடப்பெற்றிருந்ததோடு, மக்களால் பயிரிடப்பெறும் பயிரிலும் ஒரளவு இனாமாகப் பெற உரிமையும் தரப்பெற்றிருந்தது. இக்காலக் கிராம முனிசீபு அக்காலத்தில் இல்லை. அவ்வரி வசூலிக்கும் பதவி 1836ல் வந்தது. 1816லிருந்து காவல் வகை அதிகாரம் அவரிடம் இருந்தது.[2] இக்காலத்திலிருந்த அறங்கூறும் அவையங்களைப்பற்றி ஒன்றும் திட்டமாகச் சொல்ல முடியவில்லை. கிராம மாறுபாடுகள் பொதுமன்றத்தால் தீர்க்கப்பட்டன எனலாம். சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு ஒப்பவில்லையாயின் சுபேதார் ஒருவரைத் தீர்ப்புக்கூற நியமிப்பது வழக்கம். இக்காலத்தில் காய்ச்சிய நெய்யில் கைதோய்த்துத் தன் உண்மையைக் காட்டும் கொடுவழக்கம் இருந்தது போலும்.[3]

இக்காலத்தில் தானங்கள் பலவாகப் பல்கிப் பெருகின. கோயில்களுக்கும் சத்திரங்களுக்கும் அந்தணர்களுக்கும் பலப்பல தானங்களை அரசர்களும் மற்றவரும் செய்தனர். கிராமம் கிராமமாகப் பிராமணர்களுக்குத்


  1. 1. The Maratta Rajas of Tanjore, p. 80
  2. 2. Ibid p. 81.
  3. 3. Ibid p. 82.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/330&oldid=1358997" இலிருந்து மீள்விக்கப்பட்டது