பக்கம்:தமிழக வரலாறு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர ஆட்சிக்குப் பின்

329


தானம் தந்துள்ளார்கள். இம்மராட்டிய மன்னர்கள் இந்துக் கோயில்களுக்கும் பிராமணர்களுக்கும் தானம் வழங்கிய தோடன்றி, இக்காலத்தில் நம் நாட்டிற்குப் புதிதாக வந்த கிறித்துவப் பாதிரிமார்களுக்குங்கூடப் பலப்பல தானங்கள் செய்தனர் எனலாம். ஜெர்மனி நாட்டிலிருந்து வந்த சமய போதகர் திரு. சுவாட்ஸ் (Schwartz) என்பவர் (1726-1798) பல நன்மைகளைப் பெற்று வந்தவர். அவர் துல்ஜாஜியின் உற்ற துணைவராயிருந்தனர். அவர் இவர்கள் செய்த நன்மைகளைக் குறித்துள்ளனர்.

தஞ்சை நாடு:

வெளிநாட்டு வியாபாரம் இக்காலத்தில் வெளிநாட்டு மக்களிடமே சென்றுகொண்டு இருந்தமையாலும், இக்காலத்தில் ஆண்டவர்களும் சிறுசிறு குறுநில மன்னர்களாக நின்றமையானும் கடல் வாணிபமும் பிற வாணிபங்களும் அத்துணைச் சிறந்திருந்தன என்று கூற இயலாது. நாகை, கரைக்கால், தரங்கம்பாடி இவை துறைமுகங்கள். இதன் வழி உள்நாட்டு இறக்குமதி வரி தஞ்சை அரசர்களுக்கு ஓரளவு வருவாய் தந்தது போலும்! அரசாங்க வரி செலுத்துவோருக்கு நிலம் உடைமையாய் இருந்தது. நில வரி ஊர் முழுதுக்கும் மொத்தமாக இருந்ததே அன்றித் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பிரித்து இடப்பெறவில்லை. ஜில்லா நிலவரியை ஏலம் கூறி அதிகமாகக் கேட்பவருக்கு விட்டு வசூலித்தார்கள் போலும்! இது இக்காலத்தில் அங்காடி முதலியவற்றிற்கு நகராண்கழகத்தார் வரி வசூலிக்கும் முறை போன்றது எனலாம். மன்னர், மக்கள் உழவுக்கு வேண்டிய பொருள்கள் வாங்கப் பணம் கடன் தந்தனர். தலைநகரங்கள் தாம் படை எடுப்புக்களால் துன்புற்றன. எனினும், தொலைவில் உள்ள கிராமங்கள் அமைதியாகவே வாழ்ந்தன எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/331&oldid=1376093" இலிருந்து மீள்விக்கப்பட்டது