பக்கம்:தமிழக வரலாறு.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

தமிழக வரலாறு


இக்காலத்தில் இருப்பது போன்று ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு எழுத்தாளர்களும், பிற அலுவலாளர்களும் அக்காலத்தில் இல்லை போலும்[1] எனினும், அரசியல் ஒழுங்காக முறை தவறாது நடைபெற்று வந்தது என்பது நன்கு தெரிகின்றது. தஞ்சை மாவட்டத்தையும் தஞ்சையையும் பெருமையாகப் பேச விரும்பும் K.R. சுப்பிரமணியம் அவர்கள் அழகாக அதன் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றார். கர்நடாக நவாபுவின் படை எடுப்பால் தொல்லையுற்ற கி பி.1773க்கும் 1775க்கும் இடைப்பட்ட இரண்டு ஆண்டுகள் தவிர்த்து, தென்னாட்டு நெற்களஞ்சியமும் அறிவுடை மக்களை ஈன்றதாயகமும், கலைமலிந்து நின்றதுமாகிய தஞ்சைநாடு கரிகாற்சோழன் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரையில் தன் நிலைகெடாமல், பெரிதும் துன்புறுத்தப் பெறாமல் தமிழர்தம் பழம்பெருங்கலைகளையும் கலாசாரத்தையும் குலைத்துவிடாமல் இந்து சமயச் சின்னங்களாகிய பெருங் கோயில்களைக் கொண்டதாய்ச் சென்ற நூற்றாண்டு வரையிலுங்கூடக் கிறித்தவ இசுலாமிய மதங்களைக் கால் கொள்ள வழிதாராததாய்த் தன் நிலையில் சிறந்து நிற்கின்றது என்கின்றார்[2]. இவ்வாறு தமிழ்நாட்டின் தலை-


  1. The Maratta Rajas of Tanjore. p 9
  2. From the Palmy days of Chola Karikala down to the entry of British Raj, except for about a couple of years 1 73–1775, the Tanjore Country, the granery of the South, the abode of learning, the home of music, the mother of intellectual and intelligent sons and daughters, had been uninterruptedly a Hindu Kingdom preserving the ancient culture and its symbols, the temples, uninfluenced by Muslims and Christian contact down of the last century.
    (The Maratta Rajas of Tanjore p. 223)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/332&oldid=1359202" இலிருந்து மீள்விக்கப்பட்டது