பக்கம்:தமிழக வரலாறு.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர ஆட்சிக்குப் பின்

331


சிறந்த காவிரிபாயும் சோழ நாடானது மேலைநாட்டு மக்கள் தம் அரசியல் வழிக்கு மெள்ளச் சென்றுகொண்டே இருந்தது என அறிகிறோம்.

மேலை காட்டார் ஆட்சி:

இந்நிலையில் மதுரையிலும் தஞ்சையிலும் பிற இடங்களிலும் மெள்ளமெள்ள இந்து சமய மராட்டியர் ஆட்சி நீங்க, முகலாய, மேலைநாட்டு மக்கள் ஆட்சி கால் கொள்ளத் தொடங்கும் காலம் வந்து கொண்டிருந்தது எனலாம்.

கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே (கி.பி 1600 தொடங்கி) மேலைநாட்டு வாணிப மக்களாகிய நான்கு நாட்டு மக்களும்[1] தத்தம் ஆதிக்கத்தை நாட்டில் ஊன்றிக்கொள்ள முயன்றனர். உள்நாட்டில் நிலைத்த தமிழராட்சி இல்லாமையும் அவர்களுக்கு உடன் துணையாய் அமைந்தது எனலாம். தமிழ் நாட்டில் மட்டுமன்றி மேலைக் கடற்கரைப் பகுதியிலும் வங்காள நாட்டிலுங்கூட அவர்கள் கடலாதிக்கத்தைக் கைப்பற்றிப் பின் நில ஆதிக்கத்தையும், தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பையும் கைக்கொள்ள முனைந்தார்கள். அவர்களுள் போர்த்துகீசியரும் டச்சுக்காரரும் முன் வந்தவராயினும், அவர்களுக்குப் பின்னர் வந்த ஆங்கிலேயரே மெள்ளமெள்ள ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பினைப் பெற்றனர். அவர் பின் வந்த பிரெஞ்சுக்காரர் சிறிது ஏறி இறங்கலுற்றனர். ஆங்கிலேயர் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பேரோடு இங்கிலாந்தில் பதிவு செய்து கொண்டு வெறும வாணிபம் கருதியே இங்கு வந்தனர். அவர்களைப் போன்றே மற்ற போர்த்துகீசிய டச்சு பிரெஞ்சு மக்களும் வாணிபத்துக்காகவே இங்கு வந்தனர். என்றாலும், நம் நாட்டின் சூழலும், நிலையிலா


  1. Portuguese, Dutch, French and English
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/333&oldid=1359205" இலிருந்து மீள்விக்கப்பட்டது