பக்கம்:தமிழக வரலாறு.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

தமிழக வரலாறு


அரசியலும், இசுலாமியராட்சியும், பிறவும் அவர்களை இந்நாட்டு ஆட்சிப் பீடத்தில் அமர்த்திவிட்டன எனலாம்.

இந்த நிலையில்தான் நாம் முதலில் கண்டபடி மேலை நாட்டார் நம் நாட்டுச் சூழ்நிலையைப் பயன்படுத்தி விரோதிகள் இருவருக்கும் எதிர்த்து நின்று உதவி, தத்தம் ஆணையைப் பெருக்கிக்கொண்டனர். இவர்கள் நிலைக்கேற்ப அங்கு ஐரோப்பாவிலும் அவர்தம் நாடுகளுக்கிடையே போரும் பிணக்கும் மிக்கு நின்றன. அந்த வேகம் இங்குத் தமிழ்நாட்டில் மட்டுமன்றிப் பரந்த பாரத நாடு முழுமையும் பரவியது எனலாம்.

போர்த்துக்கீசியர்:

முதல் முதல் போர்த்துக்கீசியரே இந்தியக் கடலாதிக்கத்தைக் கைக்கொண்டார்கள். அவர் உத்தரவின்றிக் கடலில் எந்த நாட்டுக் கப்பலும் செல்ல இயலாது. வாஸ்கோடகாமாவின் வருகை இந்திய வரலாற்றையே மாற்றி அமைத்துவிட்டது எனலாம். அவர்கள் வாணிப வளம் பெருக்குவதோடு சமயத்தையும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கோடு வந்தவர்களே. அத்துடன் அவர்தம் நாகரிகத்தையும் பழக்க வழக்கத்தையும் மெள்ள இந்நாட்டில் குடியேறச் செய்தார்கள் எனலாம். போர்த்துக்கீசியரே இந்தியாவில் முதல் முதல் அச்சுக்கூடம் நிறுவியவர் எனலாம். மேலைக் கரை கோவாவிலும் பிற இடங்களிலும் அவர்தம் கத்தோலிக்க மதம் வளர அவர்கள் செய்த தொண்டு சிறந்தது. அதுபோன்றே விசயநகர ஆட்சியிலிருந்த அவர்தம் வாணிபமும் சிறந்திருந்தது. விசயநகர வேந்தர்களுக்கு அவர் தம் பாரசீகத்திலிருந்து குதிரைகள் வாங்கி வந்து தந்தார்களாம்[1]


  1. A Survey of Indian History; by Panickar, p. 183.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/334&oldid=1359210" இலிருந்து மீள்விக்கப்பட்டது