பக்கம்:தமிழக வரலாறு.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர ஆட்சிக்குப் பின்

335


வில்லை. எனினும், பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர்கள் முயற்சி பயன் அளிக்கத்தொடங்கிவிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும்பாலும் போர்த்துக்கீசியரும் டச்சுக்காரரும் நிலைகெட, தமிழ்நாட்டில் ஆங்கிலேய பிரெஞ்சு ஆதிக்கங்களும் போர்களுமே நிலைபெற்றன. தமிழ்நாட்டில் மட்டுமன்றி வடக்கே பம்பாய், கல்கத்தா போன்ற இடங்களிலும் ஏறக்குறைய இதே சூழ்நிலை இருந்தது எனலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டே ஆங்கிலேயரை இங்கு ஊன்ற வைத்த நூற்றாண்டு எனலாம். அக்காலமே நாம் முன் கண்டபடி ஆர்க்காட்டு முற்றுகை முதலியன நடை பெற்ற காலம். பிரெஞ்சுக்காரருக்காக ‘டுயூப்ளே’ (1742ல் கவர்னராக வந்தவர்) புதுச்சேரியில் இருந்து கொண்டும், ஆங்கிலேயருக்காக (கிளைல்) சென்னையில் இருந்து கொண்டும் உள்நாட்டுப் போர்களில் கலந்து நின்றனர். இதே நிலையில் மேலையிலும் இரு நாடுகளுக்கும் போர் தொடங்க, மெளரிஷியசிலிருந்து பிரெஞ்சுத் தளபதி இந்தியக்கடலுக்கு வந்து ஆங்கிலேயரைத்துரத்த நினைத்து ஓரளவு வெற்றியும் கண்டார். சென்னையையும் கைப்பற்றினார் எனினும், அங்கு மேலை நாட்டில் நடந்த ஒப்பந்தப்படி பெரும்பணம் பெற்றுச் சென்னை ஆங்கிலேயருக்குத் திருப்பித் தரப்பட்டது. இதற்குப்பிறகு சந்தா சாகிபுவுக்கும் மகமதலிக்கும் போர் நடைபெற்றது. கிளைவ் மகமதலிக்காகப் படையெடுத்துச் சென்று போரின்றியே ஆர்க்காட்டில் வெற்றிகொண்டார். இதற்காக டூயூப்ளே ஆங்கிலேயரை எதிர்க்கச் சென்னை சென்றாரேனும், வெற்றி கண்டாரில்லை. ஆங்கிலேயர் ஆதிக்கமே மேலோங்கக் கர்நாடகத்தின் நவாவுபும் அவர்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/337&oldid=1359014" இலிருந்து மீள்விக்கப்பட்டது