பக்கம்:தமிழக வரலாறு.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XVIII. ஆங்கிலேயர் ஆட்சி

ஓரினப் கொள்கை

தம்மொடு வந்த பிற மேலைநாட்டு மக்களையெல்லாம் மெள்ள மெள்ள வெற்றிகொண்டு, கல்கத்தாவில் ‘கவர்னர் ஜெனரலை’ ஏற்படுத்தி ஆளத்தொடங்கிய ஆங்கிலேயர் தலை நிமிர்ந்து வளர ஆரம்பித்தனர். வெறும் வாணிபத்தின் பொருட்டுக் கடல் கடந்து வந்த ஆங்கிலேயர், அக்கடலாதிக்கத்தைத் தமக்கே உரியதாகிக்கிக் கொண்டதோடு, இந்திய நாடு முழுமையும் ஆளும் உரிமையும் பெற்றுவிட்டனர். வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரல் ஆன பின் கிழக்கிந்தியக் கம்பெனி தனது வாணிபத்துறையைக் காட்டிலும் நாட்டைக் கட்டி ஆள்வதிலேயே கருத்தைச் செலுத்தியது. முதலில் இமயம் முதல் குமரிவரை விரிந்து கிடக்கும் பாரதநாட்டை ஒன்றாக்கும் பணியில் தலைப்பட்டார்கள். வெவ்வேறு வகை நாகரிகம், கலை, பண்பாடு, கலாசாரம் முதலியன கொண்ட பல்வேறு மக்களினத்தை இந்திய இனம் என்று ஒன்று ஆக்கி, அதன் வழி ஓர் இனக்கொள்கையை (One nation theory) நிறுவிவிட்டனர். வேங்கடம் குமரிக்கு இடைப்பட்டு, யாரோடும் கலவாது தனியாகச் சிறப்புற்றிருந்த தமிழகமும் காலவெள்ளததால் சுழற்சிபெற்று ஆங்கிலேயர் வழி அடங்கிவிட்டது. ஐயாயிரம் கல் தாண்டி வந்து ஆணை செலுத்தினாலும் அவர்தம் ஆனை தமிழ் மண்ணிலிருந்து பிறக்கவில்லை. கல்கத்தாவிலும் தல்லியிலுமிருந்து பிறந்தது அவர்தம் ஆணை எப்படியோ ஒன்றிய பாரதத்தை ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல் கட்டியாண்ட ஆங்கிலேயர், தாம் விட்டுச் செல்லும் போது நாட்டை இரண்டாக்கி விட்டுச் சென்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/340&oldid=1359024" இலிருந்து மீள்விக்கப்பட்டது