பக்கம்:தமிழக வரலாறு.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

தமிழக வரலாறு


இங்கு தமிழை வளர்க்கவும் தனிமுறையில் தமிழ்ப் பண்பாட்டினை ஒம்பவும் வழி இல்லாதுபோயிற்று. பரந்த பாரதத்தை ஒன்றாக்கிய வகையில் ஆங்கிலேயருக்குச் சில சிக்கல்கள் உண்டாயின. சிலவற்றை நேரடியாகத் தமது பொறுப்பிலும் சிலவற்றைத் தம்கீழ் அடங்கிய அரசர்கள் பொறுப்பிலும் விட்டு வைத்தார்கள் அவ்வழியில் நம் தமிழ் நாட்டில் புதுக்கோட்டை அரசர் பகுதி ஒன்றும் தனியாகவே நின்றுவிட்டது. புதுக்கோட்டை அரசு அளவில் மிகச்சிறியதாய் இருந்தமையின் தமிழ்நாட்டின் பெரும்பகுதி ஆங்கிலேயரின் நேர் பார்வையிலேயே இருந்தது எனலாம்.

வடவிந்தியாவில் நடந்த சிப்பாய் கலகம் போன்ற பெரும்போர்களிலும் குழப்பங்களிலும் பலப்பல மாறுதல்கள் நடைபெற்றன எனலாம். மக்கள் உணர்ச்சி பெற்று வெள்ளையரை விரும்பா வகையில் வெளியேற்ற முயன்றனர் என்றாலும், அவர்தம் செயல்களும் கலகங்களும் முழு வெற்றியைத் தரவில்லை. எனினும், இத்தகைய சூழ்நிலைகள் இந்திய நாட்டு ஆட்சிப் பொறுப்பைக் கம்பெனியினிடமிருந்து ஆங்கில அரசாங்கத்திடமே மாறும்படி செய்துவிட்டது. 1848ல் இந்தியா ஒன்றாக இணைந்துவிட்டது. இங்கிலாந்தின் பாராளுமன்றம், கி.பி. 1858ல், இன்றைக்குச் சரியாக ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்[1] கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்த ஆட்சிப் பொறுப்பைத் தானே ஏற்று நடத்தத் தொடங்கியது. அது முதல் அந்தக் கம்பெனியே நாட்டில் இல்லையாயிற்று எனவே, கம்பெனியாட்சி மறைய, ஆங்கிலப் பாராளுமன்றத்தின் நேரடியான ஆட்சி நாட்டில் தொடங்கிவிட்டது.


  1. இதன் முதல் பதிப்பு 1958-ல் வெளிவந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/344&oldid=1359045" இலிருந்து மீள்விக்கப்பட்டது