பக்கம்:தமிழக வரலாறு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

தமிழக வரலாறு


பல பெண்கள் பயின்றும் முன்னேறியும் அரசரோடு நேருக்கு நேர் பேசும் திறம் பெற்றிருந்தார்கள். எனினும், இடைக்காலத்தில் அவர்கள் நிலை தாழ்ந்தது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பெண்கள் நிலை வளர்ந்து விட்டது எனலாம். பெண்களுக்கெனத் தனிப் பள்ளிகளும், கல்லூரிகளும் நிறுவிப் பெண் கல்வியை வளர்த்தவர் ஆங்கிலேயர்களே. அதைப் போன்றே தாழ்த்தி ஒதுக்கப்பட்ட மக்கள் என்பாருக்குக் கல்வி வசதிகளையும் பிற நல்ல வசதிகளையும் தந்தவர்கள் ஆங்கிலேயர்களே. தாழ்த்தப்பட்டவர் யார் யார் என்று தேடி, அறிந்து ஊர்தோறும் சென்று அவர்கள் நிலை உணர்ந்து, அவர்களுக்கு இலவசக் கல்வியும், குறைந்த சம்பளத்தில் கல்வியும் அளித்துப் பிற வசதிகளையும் செய்து வந்தனர். மக்களுக்குள் இருக்கும் சாதி வேறுபாடுகளையும், உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாழ்த்தி வைத்திருக்கும் கொடுமையையும் தாழ்ந்த சாதியார் விலங்கினும் கேடாக வாழ்வதையும் பல ஆங்கிலேயர் கண்டு கண்ணீர் வடித்து, வேண்டிய வகையில் ஆட்சி முறையிலேயே உதவவும் முன்வந்தனர். அவ்வாறு தென்னிந்திய சாதிகளைக் கண்டு அவர் பற்றிய விளக்கங்களை ‘தர்ஸ்டன்’ என்பார் தம் நூலுள் விளக்குகிறார்[1] இவ்வாறு ஆண் பெண் வேறுபாட்டில் உண்டாகும் கேடுகளையும் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு நிற்பார்தம் கொடுமைகளையும் நீக்க ஆங்கில அரசாங்கத்தார் பெரும்பாடுபட்டனர். தாழ்ந்த சாதி யார் எனப்படும் வகையிலே உள்ள பலர் தென் தமிழகத்தில் அதிகமாக உயர்ந்தோரால் கொடுமை செய்யப் பெற்ற காரணமே அபபகுதியில் இந்து சமயத்துக்கு மாறுபட்ட இசுலாமிய, கிறித்துவ சமயங்கள் வளர வாய்ப்பை உண்டாக்கித் தந்தது எனலாம் இவ்வாறு


  1. E. The Castes and Tribes of South India-By Thurston
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/352&oldid=1359067" இலிருந்து மீள்விக்கப்பட்டது