பக்கம்:தமிழக வரலாறு.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

தமிழக வரலாறு



வேந்தர் பரம்பரையினருடன் வந்த சிலரும், இங்கேயே மறக்குடிகளாய் வாழ்ந்த பாளையக்காரரும் மற்றவர்களும் அங்கங்கே தனித்தனியாய் இருந்து, ஆங்கிலேயருக்கு அடிமையாகா வகையில் நாட்டைக் காக்க முயன்றனர். கிராமங்களில் வாழ்ந்த மக்களுங்கூட உணர்வுடையவராய், அந்நியருக்கு இடங்கெடா வகையில் இப்புரட்சி வீரர்களுக்கு உதவியே வந்தார்கள். இந்தச் செயல் களெல்லாம் ஆங்கில ஆட்சிக் காலத்தில் மறைந்து கிடந்தன; இன்று வெளிவருகின்றன. இன்னும் நாட்டு வீரர்களை வஞ்சகத்தால் ஆங்கிலேயர் தேடிப்பிடித்ததையும், அகப்பட்டவரைக் குண்டுக்குப் பணிய வைக்க முயன்ற தையும், பணியாதவரை குண்டுக்கு இரையாக்கியதையும் இன்று வரலாற்றில் விளக்கிக் காட்டுகின்றனர் அறிஞர். உரிமைப் போரில் பங்கு கொண்ட, சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த காஜூலு இலட்சுமி நரசிம்மலு செட்டியார், சேலம் இராமசாமி முதலியார் போன்ற நாடு மறந்தவர்களைக்கூட இன்று அறிஞர் நாட்டுக்கு அறிமுகப்படுத்துகின்றனர்.[1] எனவே, ஆங்கிலேயர் கால் வைத்த அந்த நாளிலேயே விடுதலை வேட்கையால் இயன்ற வரையில் எதிர்த்து நின்று போராடிய பெருமை தமிழகத்துக்கு உண்டு எனலாம்.

விடுதலை வேட்கைக்குப்பின் சூழ்நிலை:

இந்திய நாட்டில் வாழும் மக்கள் நலனுக்காகப் பாடு படுவதற்கென 1852லே "பிரிட்டிஷ் இந்தியக் கழகம்" என்ற ஒரு சபை தொடங்கப் பெற்றது. அதில் ஆங்கிலே

  1. 1. இரு பெருந்தலைவர்- ந. சஞ்சீவி 2. British Indian Association
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/362&oldid=1358958" இலிருந்து மீள்விக்கப்பட்டது