பக்கம்:தமிழக வரலாறு.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கு முன்னும் பின்னும்

363


அமைந்தது. இத்துடன் ஆங்கிலேயரின் கையாட்கள் பலப் பல வகையான ஆசை வார்த்தைகள் சொல்லவே, தமிழ் மக்கள் ஏமாற்றமுற்றனர். ஆகவே, இலட்சக் கணக்கில் இலங்கை, மலேயா, பர்மா முதலிய நாடுகளுக்குச் சென்றனர். இப்படி வாணிபம் பொருட்டும், அடிமை வாழ்வில் வளம்பெருக்க நினைத்தும் பல தமிழர்கள் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலும் தாய் நாட்டைவிட்டுச் சென்றனர். இன்று எல்லா நாடுகளும் உரிமை பெற, அங்கங்கே வாழும் தமிழர்கள்நாடுகளின் வளம் பெருக்கிய தமிழர்கள்-வாழ வகையின்றி வாட்ட முறுகின்றதைக் கண்ணால் காண்கிறோம். இன்று உரிமை இந்தியா தன் மக்களுள் யாரையும் கூலிகளாக வெளியே அனுப்பவில்லை யாதலால், நம் தமிழர்களும் கூலிகளாக வெளியில் செல்லுவதில்லை.

காங்கிரஸ்:

காங்கிரஸ் சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்து வந்தது. எனினும், காந்தியடிகள் அதில் கலந்துகொண்ட பிறகு தான் அந்தத் தாபனம் நன்கு வளர்ச்சி அடைந்தது எனலாம். சோர்ந்த உள்ளத்துக்கு உணர்வூட்டும் வகையில் காந்தி அடிகளாரின் வருகை காங்கிரஸ் அமைப்புக்கு உணர்வூட்டிற்று. தென்னாப்பிரிக்காதான் இந்திய காந்தியை உலகுக்குக் காட்டிற்று. இந்திய நாட்டு மண்ணில்- குஜராத்தில் பிறந்து, இலண்டனில் பயின்று. பாரிஸ்தராகித் தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி அடிகள் அங்கு இந்திய மக்கள் கறுப்பர் என்ற பெயரினால் படும் அவதியைக்கண்டு தம் வாழ்வை உதறி, மக்களுக்குத் தொண்டாற்ற முன் வந்தார். அந்தத்தொண்டு வாழ்வே அவரை உலகுக்கு உணர்த்தியது; அங்கு ஒரளவு வெற்றி கண்ட காந்தி அடிகளார். இங்கு இந்திய மண்ணில் கால் வைத்து, காங்கிரசில் சேர்ந்தார். அவர் வருகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/365&oldid=1358969" இலிருந்து மீள்விக்கப்பட்டது