பக்கம்:தமிழக வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வில்லை எனலாம். தொல்காப்பிய உரைமேற்கோளாக வரும் பல பாடல்களின் நூற்பெயர்களும் அறியக்கூடவில்லை. "இலக்கியங் கண்டு அதற்கு இலக்கணம் விளம்பிய அகத்தியமும் தொல்காப்பியமும் தோன்றுவதன் முன்னமே பல இலக்கிய நூல்கள் வளர்ந்திருக்க வேண்டும் என்பது உறுதி. எனினும், கடலூழிகள் காரணமாகவோ, வேறு வகையிலோ அவையெல்லாம் நமக்குக் கிடைக்கப் பெறவில்லை. இப்போது நாம் பெற்றுள்ள இலக்கியங்களுள் பெரும்பாலன கடைச் சங்க கால இலக்கியங்களே. இவ்விலக்கியங்களைக் கொண்ட ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழக வரலாற்றை வரைகின்றார்கள் ஆசிரியர்கள். தமிழ் நாட்டில் வாழ்ந்த முடியுடை மூவேந்தரைப் பற்றியும், சிற்றரசர், குறுநில மன்னர், வீரர் ஆகியோரைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும். அவர்தம் வாழ்க்கை முறை, வளம், வாணிபம், தொழில் முதலியன பற்றியும் அந்த இலக்கியங்கள் பலபடப் பாராட்டிப் பேசுகின்றன. கடைச்சங்க இலக்கியம் எனப்படும் பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் நமக்குக் கிடைக்கவில்லையாயின், இன்று தமிழன் உயர்ந்தவன், பண்பட்டவன்' என்றும், 'பழங்காலத்தவன்’ என்றும் பேசும் பேச்செல்லாம் தோன்றி இருக்க மாட்டா. சங்க கால இலக்கியங்கள் மட்டுமன்றிப் பிற்கால இலக்கியங்கள் பலவும் தமிழ் நாட்டு வரலாற்றைப் பெரிதும் காட்டுகின்றன எனலாம். பிற்கால இலக்கியங்கள் பெரும்பாலும் சமயம் பற்றி எழுந்தனவாயினும் அவற்றிலும் வரலாற்றுக் குறிப்புக்கள் பல உள்ளன.சிறப்பாகப் பிற்காலச் சோழர் காலத்தே எழுந்த பலப்பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/37&oldid=1359159" இலிருந்து மீள்விக்கப்பட்டது