பக்கம்:தமிழக வரலாறு.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

தமிழக வரலாறு


போராட்டம் நடைபெற்றது இதனால் பெருந் தலைவர்களெல்லாம் சிறைக்குச் செல்ல அமைந்தது எனலாம். போர் அலை ஓய்ந்த பின் 1945 மார்ச்சு ஏப்பிரலில் அனைவரும் விடுதலை பெற்றனர்.

உரிமை பெற்ற இந்தியா:

உலக நிலைக்கு ஏற்ப ஆங்கில அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. போருக்குப்பின் உலக அரங்கு (U.N.O.) கூட வேண்டிய நிலை உண்டாக, அந்த நிலையில் அடிமை நாடுகள் விடுதலை பெற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆங்கிலேயரும் தம் கீழிருந்த இந்தியா, பர்மா, இலங்கை முதலிய நாடுகளுக்கு உரிமை வழங்கினர். இந்தியா மட்டும் இரண்டாக்கப்பட்டது. எனினும் அதனால் தமிழ்நாட்டில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. 1947 ஆகஸ்டு 15ல் ஆங்கிலேயர் இந்தியாவை இந்தியரிடம் ஒப்படைத்து விலகிவிட்டனர். உரிமை பெற்ற காலத்து இருந்த வைசிராய் மவுண்டு பேட்டன் நீங்கிய பிறகு முதன் முதல் கவர்னர் ஜெனரலாக–இந்தியா முழுதுக்கும் தலைவராக–ஒரு தமிழர்– C. இராசகோபாலாசாரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகம் நடத்தி வந்தார்.

இன்றைய தமிழ்நாடு:

தமிழ்நாட்டு அரசியலிலே விடுதலைக்கு முன்னும் பின்னும் பெரும் மாறாட்டங்கள் நடைபெறவில்லை எனலாம். 1947லும் 1952லும் இருமுறை சட்டசபைகளுக்குத் தேர்தல்கள் நடைபெற்றன. அவற்றுள் 47ல் காங்கிரஸ் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றது. எனினும், 52ல் அந்த நிலை இல்லை. தமிழ்நாட்டுடன் இணைந்த மலையாளம் ஆந்திரப் பகுதிகளில் பொதுவுடைமைக் கட்சியாகிய ‘கம்யுனிஸ்டு கட்சி’ ஆதிக்கம் பெற்றிருந்தமையால் அக்கட்சியாளர் பலர் தேர்ந்தெடுக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/372&oldid=1359081" இலிருந்து மீள்விக்கப்பட்டது