பக்கம்:தமிழக வரலாறு.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

தமிழக வரலாறு


வகையினைக் கொண்டு, மக்களுக்கு வழி காட்டி நின்றார் அவர். இந்த நுாற்றாண்டின் தொடக்கத்தில் உரிமை வேட்கை நாட்டில் முகிழ்த்து நின்ற காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பாடல்கள் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பின எனலாம். சாதி வேறுபாடுதான் அடிமை வாழ்வுக்குக்காரணம் என்பதையும், ஆங்கிலேயர் இந்தியரை எப்படி விலங்கினும் கேடாக மதிக்கின்றனர் என்பதையும், தமிழ் மக்கள் வெளிநாடுகளில் தேயிலைத் தோட்டங்களில் படுகின்ற அவதியையும், விடுதலை வேட்கையில் மக்களுக்கு உள்ள விருப்பினையும் அவர் எழுதியுள்ளார். அப்பாடல்களை, விடுதலை வேட்கையினை நாட்டில் பரப்பிய காங்கிரஸ்காரர்கள், தெருவெல்லாம் முழக்கினர். விடுதலைப் பாடல்களோடு தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றிய பாடல்களும் கண்ணன், கண்ணம்மா போன்ற காதல் கலந்த பக்திப் பாடல்களும் அவர் பாடயுள்ளார்; அவற்றுடன் சில உரைநடை நுால்களையும் எழுதியுள்ளார். அவர் பாடல்களைப் பலரும் பாடத் தொடங்கினர். ஆங்கில அரசாங்கம் அப்பாடல்கள் பாடுவதற்கும் தடை விதித்தது எனலாம். அவரும் சிறிது காலம் புதுவையில் மறைந்து வாழவேண்டிய நிலை உண்டாயிற்று. அவர் பாடல்கள் இலக்கியத்தில் ‘பாரதியுகம் இது’ என்று மக்கள் கூறும் அளவுக்கு உணர்ச்சியை உண்டாக்கி விட்டன. எனினும் விடுதலை பெற்ற பிறகு அவர் தம் விடுதலைப் பாடல்கள் காலத்துக்கு ஏற்ற பாடல்கள் ஆகாமல் நின்றுவிட்டன எனலாம். பிற பாடல்கள் இலக்கியமாகி நன்கு போற்றப்படுகின்றன.

பாரதியாரை ஒட்டிச் சிலர் நன்கு பாட்டிசைத்தனர். அவருள் புதுவையில் அவரோடு கூடவே இருந்த பாரதி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/378&oldid=1359102" இலிருந்து மீள்விக்கப்பட்டது