பக்கம்:தமிழக வரலாறு.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கு முன்னும் பின்னும்

379


போதிய கல்வி அறிவு இல்லை. ஆதலால், தலைவர்கள் அவர்களைச் சுலபமாக ஏமாற்றி விட முடிகிறது. இந்த நிலை நாட்டில் மெள்ள மெள்ள மாறிவருகிறது எனலாம். தாழ்ந்தோரை உயர்த்த வேண்டிய பணிமனைகளும், தொழிலாளர் இயக்கங்களும், பிற கழகங்களும் எல்லா வேறுபாடுகளும் நீங்கவும், பொருளாதாரம், சமூகம் இவற்றில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அகலவும் பாடுபடுகின்றன. இந்திய அரசாங்கமும் அதன் வழித் தமிழ்நாட்டு அரசாங்கமாகிய நம்நாட்டு அரசாங்கமும், ‘சோஷியலிச சமுதாயம்’ அமைத்துப் பொருளாதார ஏற்றத் தாழ்வை நீக்க வழிகோலுகின்றன. அதனால், நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வரி விதிப்பு அதிகமாகியுள்ளது. பலர் வரிச்சுமை தாளாது வாடுகின்றனர். என்றாலும் சமதர்மக் கொள்கை வழிச் செயலாற்ற அரசாங்கம் கருதுவதால் வரிச்சுமை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டேதான் போகின்றது.

இன்று (இரண்டாம் பதிப்பு வெளிவரும் போது) இந்திய நாடு சீனப் படை எடுப்பால் நலிந்துள்ளமையின் நாட்டு மக்கள் அனைவர் உள்ளமும் செயலும், ஒருங்கு திரண்டு. நாட்டை அரண் பெற்றதாக்க-உரமுற்றதாக்க-வேண்டிய ஆக்கப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இறுதி வேண்டுகோள்:

தமிழ் நாட்டு மக்கள் இன்று விழிப்படைந்துள்ளார்கள் எனலாம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து வந்த மூத்த தமிழ்மொழி, தலைநிமிர்ந்து வாழ வழி காணவேண்டும் என்ற உணர்ச்சி உண்டாகியுள்ளது. அதைச் செயலாற்றும் முறையிலேதான் தலைவர்கள் மாறுபடுகின்றார்கள். ஒவ்வொரு கட்சித் தலைவரும் தத்தம் வழியே சிறந்தது என வாதாடுகின்றனர். அறியாத் தமிழ் மக்கள் அவர்களைப் பின்பற்றுவது எவ்வாறு என் எண்ணி அலமந்து நிற்கின்றனர். இந்நிலையில் நாட்டு நிலை இன்று அமைகின்றது எனலாம்?

இந்த நான்காம் பதிப்பு வெளி வரும்போது (1979) தமிழக அரசிலும் பிறவற்றிலும் மாறுபாடுகள் நடந்துள்ளன. திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/381&oldid=1359157" இலிருந்து மீள்விக்கப்பட்டது