பக்கம்:தமிழக வரலாறு.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

தமிழக வரலாறு


ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இயங்குகிறது. நாட்டுக்கு விடுதலை தேடித் தந்த காங்கிரஸ் பெரும்பாலும் நாட்டிலும் தமிழகத்திலும் பதவியில் இல்லை என்றே சொல்லலாம். பாரத் நாட்டிலும் டில்லி அரசாங்கப் பாராளுமன்றம் கலைக்கப் பெற, இடைத்தேர்தலுக்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. வருங்காலத்தைப் பற்றி மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இந்நூல் எழுதிச் சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இதன் முதல் பதிப்பு 1958ல் வெளிவந்தது. பின் 1979 வரை மொத்தம் நான்கு பதிப்புக்கள் வெளி வந்தன. எனினும் அவற்றுள் அந்த இருபது ஆண்டுகளில் உண்டான மாற்றங்கள் பற்றி ஒன்றும் காட்டவில்லை. இன்றும் அதே நிலையில்தான் இந்தப் பதிப்பும் வெளி வருகிறது. இதற்கிடையில் பரந்த பாரதத்திலும் தமிழ் நாட்டிலும் பலப்பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அத்தனையும் இங்கே வடித்துக் காட்டல் இயலாது.

மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி இடையே மாறி ஒரு சில கால அளவிலே வேற்று ஆட்சிகள் நடைபெற்றன. எனினும் இன்று காங்கிரஸ் ஆட்சியே நடைபெறுகின்றது. ஆயினும் தமிழ்நாட்டில் 1967ல் இழந்த தனது ஆட்சியை காங்கிரஸ் இன்னும் கைப்பற்றவில்லை. அன்று தொடங்கிய திராவிட கழக மரபே சிற்சில பெயர் மாற்றங்களுடனும் வேறு சில மாற்றங்களுடனும் தமிழகத்தில் ஆட்சி புரிந்து வருகின்றது. தந்தையாகிய பெரியாரும் தாயாகிய திரு.வி.க. வும் ஆய்ந்து, ஆழ்ந்து கண்ட பெயர் இந்தத் ‘திராவிட நாடு’ ‘திராவிட இயக்கம்’ என்ற பெயர்கள். இந்தப் பெயரையே நாட்டுக்கு உணர்த்தியவர் நாம் மேலே கண்ட மேலைநாட்டுக் ‘கால்டு வெல்’ என்ற அறிஞன் தான். அந்தப் பெயருடன் பெரியார் தொடங்கிய கட்சி அறிஞர் அண்ணாவினால் திராவிட முன்னேற்றக் கழகமாகிப் பின் அண்ணா திமுக ஆகி, தொடர்ந்து அனைத்திந்திய அதிமுக ஆகி ஆட்சியைத் தொடர்ந்து திராவிட கழகத் துளிர்களே தமிழகத்தை ஆண்டு வருவதைக் காண்கிறோம். அவற்றுள்ளும் பலப் பல புதுத் துளிர்க் கழகங்கள் சிறு சிறு பெயர் மாற்றத்துடன் அண்மையில் கிளைத்துள்ளன. தவிர்த்து. பொது உடைமைக் கட்சிகளும் உள்ளன. ‘கட்சி’ என்ற பெயரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/382&oldid=1359161" இலிருந்து மீள்விக்கப்பட்டது