பக்கம்:தமிழக வரலாறு.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கு முன்னும் பின்னும்

381


இன்றேனும் பல சாதிகளின் பெயரால் புதுப்புதுக் கழகங்கள் தோன்றி, அரசியலில் பங்கு கொள்ளும் வகையில் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்கின்றன சாதி, சமய மாறுபாடுகள் மறையத் தொடங்கியுள்ளன என முன்னே குறித்துள்ளேன். எனினும் இப்போது சாதி, சமயங்களின் பெயரால் பல கழகங்கள் தோன்றி ஒன்றற்கொன்று மாறுபட்டு நிற்கின்றன. இணைந்த தமிழ்ச் சமுதாயம் மறுபடியும் நிலைகுலைந்து தடுமாறுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.

சமுதாய நிலை இதுவாக, கல்வியும் தமிழும் வளர்ச்சியுறவில்லை. கடந்து நாற்பது ஆண்டுகளாக வகுப்பு எண்கள் மாற்றும் பாடமுறை, தேர்வுமுறை, பிறவற்றில் வெள்ளையன் விட்டுச் சென்ற கல்வி முறையினையே தமிழ்நாடு பின்பற்றுகிறது. அண்டை மாநிலங்களிலெல்லாம் அவ்வம்மொழி பயிலாமல் பள்ளிப் படிப்பை முடிக்க முடியாது என்ற நிலை இருக்கத் தமிழ்நாட்டில் தமிழைப் பயிலாமலே மிக உயரிய கல்விப் பட்டங்கள் வரை பயிலலாம் பிரஞ்சுஜர்மன் முதலிய வெளிநாட்டு மொழிகள், பிற உள்நாட்டு மொழிகளுடன் பதினான்கில் ஒன்றிாகவே தமிழ், தமிழ்நாட்டில் உள்ளது. ‘வீதிதோறும் இரண்டொரு பள்ளி’ என்று பாரதி கூறியபடி பள்ளிகள் வளரினும் அவை அவண் வேண்டாம் என்ற ஆங்கிலக் கல்விக்கே முதல் இடம் தருகின்றன.

“சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும்
.................................................................
அன்னயாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர் ”

என்று அவன் கனன்று, தவித்து. கவலையுற்றுக் கூறிய ஒன்றே இன்று நாட்டில் நடைபெறுகின்றது. ஆனால் அவன் விழாவை மட்டும் தவறாது ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்.

இவ்வாறு சமுதாயமும் கல்வியும் கலைகளும் தம் நிலை தடுமாறும் நிலையில் இன்று வாழ்கின்றன. வரலாற்றை நன்கு உணர்த்தும் கல்வெட்டுத்துறை நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/383&oldid=1359168" இலிருந்து மீள்விக்கப்பட்டது