பக்கம்:தமிழக வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

III. நிலநூலும் வரலாறும்


நிலத்தோடு தொடர்பு :

வரலாறு என்பது ஒரு நாட்டைப் பற்றியோ, அன்றித் தனி மனிதனைப் பற்றியோ, அன்றி ஒரு பொருள் பற்றியோ எழுதப்படுவதாகும். அந்த வரலாறு எழுவதற்குக் காரணராக யார் இருந்தபோதிலும், அவரது வாழிடமும் வரலாறு நிகழிடமும் முக்கிய இடம் பெற்றனவேயாகும். பண்டைத் தமிழ்ப் புலவர் ஒருவர் ‘எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என வாழ்த்திச் சென்றார். எனவே, வரலாறும் வாழும் நிலப் பரப்பும் பிணைந்தவையே. ஏன்? நிலம் பற்றி எழுதுவதும் வரலாறு தானே ஒரு நிலத்தைப் பற்றியும் அதில் வாழும் மன்னர் மக்கள் நிலை பற்றியும் அவர் தம் சமுதாய வாழ்வு பற்றியும் வகுத்து எழுதுவதெல்லாம் வரலாறு அன்றி வேறு என்ன? எனவே நிலநூலும் வரலாற்று நூலும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து செல்வனவேயாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் கற்கும் மாணவர்களுக்கு நிலநூலும் வரலாறும் தனித்தனியாகப் பயிற்றப்பட்டன. ஆனால் இப்போது நம் தமிழ் நாட்டில் இரண்டையும் இணைத்த பாடத் திட்டமே வழக்கில் உள்ளது.[1] அது சிறந்த ஒன்றேயாகும் வரலாறு வாழ் வதற்கு நிலம் இன்றி அமையாதது. வரலாற்றைத் தோற்றுவித்து வளர்ப்பதே நிலமன்றோ? எனவே, நிலமின்றி வரலாறு இல்லை என்பது தேற்றம். இன்றைய வரலாற்று


  1. இப்பதிப்பு வரும்போது மறுபடியும் இரு பிரிவுகளும் தனித்தனியே கற்பிக்கப்பெறுகின்றன.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/46&oldid=1357220" இலிருந்து மீள்விக்கப்பட்டது