பக்கம்:தமிழக வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழக வரலாறு


மனிதன் தோற்றம் :

இந்த உலகில் மனிதன் என்று தோன்றினான் என்பதைப் பற்றியும் திட்டமான முடிவு இல்லை. H. G. வெல்ஸ் இவ்வுலகில் பனி படர் காலம் கி. மு. 600,000 முதல் 52,000 வரை இருந்தது என்கின்றார்[1] அதற்கு முன் இவ்வுலக நிலை அறிய வழியில்லை. 30,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்புகளும் பாறைகளில் கிடைக்கின்றன அவற்றையெல்லாம் ஒட்டியேதான் வரலாற்றில் கற்காலத்தையும் பிற காலங்களையும் குறித்துள்ளனர் என்பது அறியக்கிடக்கின்றது. இன்றைய மனிதன் தன்னைப்பற்றி அறிய விரும்பின், 5000 ஆண்டுகளுக்கு முன் செல்ல வழியில்லை. ஆனால், இந்த ஐயாயிரம் ஆண்டுகளிலேதான் வரலாற்றில் எத்தனை எத்தனை மாறுதல்களும், புதுமைகளும் செயல்களும், பிற நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன என்பதை எண்ண நெஞ்சம் நெடுந்தொலைவு நீள்கின்றது. அறிவறிந்த மனிதன் வரலாற்று நிகழ்ச்சிகளைப் பெருக்கிக் கொண்டே செல்கிறான்.

நிலப் பிரிவுகள் :

தமிழ் நாட்டு வரலாற்றில் நிலப் பிரிவுகளும் பிறவும் எத்துணை இடம் பெற்றுள்ளன என்பதை அறியுமுன் இந்நில வரலாற்றில் நிகழ்ந்த அதிசயங்களையும் காணல் வேண்டும். இன்றைய உலகில் காணும் சிறந்த நாகரிகங்கள் அனைத்தும் நிலப் பிரிவு வகையில் ஆற்றங்கரை நாகரிகங்களேயாகும். காவிரிக்கரையின் திராவிட நாகரிகமும், கங்கைச் சமவெளியின் இடைக்கால நாகரிகமும் இந்திய வரலாற்றில்


  1. A Short History of the World, by H. G. Wells
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/48&oldid=1357233" இலிருந்து மீள்விக்கப்பட்டது