பக்கம்:தமிழக வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நில நூலும் வரலாறும்

49


மட்டும் வியவாதிருக்க முடியாது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சியாகவும், காடும் காடு சார்ந்த இடமும் முல்லையாகவும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதமாகவும், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தலாகவும் காட்சி அளிக்கின்றன. பாலையோ, தனி நிலமற்றதாய் இரண்டின் சிதைவால் உருவாகின்றது.

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”

என அதை இளங்கோவடிகள் அழகுறக் காட்டுகின்றார்[1] இவ்வாறு ஐவகையாகப் பகுக்கப்பட்ட நிலத்திற்குத் தனித்தனி,

“தெய்வம் உணாவே மா மரம் புள் பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ”[2]

எல்லாம் பிரித்துக் காட்டப்பெறுகின்றன. இப்படிப் பகுக்கப்பட்ட பொருள்களோடு பொருந்தி மக்கள் வாழும் வாழ்க்கை முறையே சமுதாய வாழ்வின் அடிப்படை வரலாறு ஆகும். எனவே, தமிழக ஐந்திணை வாழ்வே தமிழ்நாட்டுப் பண்டைய வரலாறு என்பது தெளிவாகின்றது

குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் மலைகளைத் தங்கள் வாழிடமாகக் கொண்டு கல்லிடைக் குறிச்சி அமைத்து, அங்கு விளையும் தேனும் தினையும் உண்டு


  1. 1. சிலப்பதிகாரம். காடுகாண் காதை, 14-16
  2. 2. தொல்-பொருள், சூ. 18.
4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/51&oldid=1375630" இலிருந்து மீள்விக்கப்பட்டது