பக்கம்:தமிழக வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழக வரலாறு


யார்? எனவே, வரலாற்றுக்குட்பட்ட நாகரிகம் நிலத்தின் பல பகுதிகளையும் தாண்டிப் பண்டை நாள் தொட்டே பரவிப் பல நிலப்பகுதிகளைப் பண்பால் பிணைத்துள்ளது. அதே நிலையில் இன்று நாம் வாழும் இந்தியப் பெருநிலமும் ஆக்கப் பெறுகின்றது. இந்திய வரலாறு என்பது இணைத்துப் பார்க்க முடியாத ஒன்றுதான்; நாகரிகம், பண்பாடு முதலியவற்றை ஒரே இடத்தில் இணைத்தும் பலவிடங்களில் சென்று அது பல மக்களைப் பின்னிப் பிணைத்து ஒன்றாக உருவாக்கியும், அவர்தம் வரலாற்றை வளர்க்கின்றது. இங்கு இந்தியாவிலே காசுமீர் தொடங்கிக் கன்னியாகுமரி வரை பல்வேறு பண்பாடுகளும் நாகரிகங்களும் இணைந்து ஒரே நாடாகி இன்று அதன் வரலாற்றை வளர்க்க உதவுகின்றன. இப்படி வரலாறும் நிலநூலும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்தே எழுகின்றன.

நிலமின்றேல், வரலாறு இல்லை. நிலமின்றேல் உயிரில்லை–மனித இனம் இல்லை–மற்றைய நாகரிகமும் பண்பாடும் இல்லை. எனவே, அவற்றைக் காட்டும் வரலாறும் இல்லையன்றோ! இவ்வாறு நிலநூலுக்கும் வரலாற்றுக்கும் இடையே அமைந்த தொடர்பு திண்ணியது; பிரிக்க முடியாதது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/56&oldid=1357289" இலிருந்து மீள்விக்கப்பட்டது