பக்கம்:தமிழக வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV. தமிழ்நாட்டு வரலாறு


தமிழக வரலாறு போற்றப்படாமை :

ஒவ்வொரு நாடும் தனது பண்டைப் பெருமையைப் பாராட்டிப் பேச விரும்புகின்றது. தமிழகமும் அவ்வாறு ஆசைப்படுவதில் தவறில்லையன்றோ! நிலைத்த புகழுடைய பழமையில்லாத பல நாடுகள் கூடிப்பேசும் நாகரிக நாளில் உண்மையிலே பழம் பெருமை வாய்ந்த தமிழ்நாடு தன் உற்ற வரலாற்றை உணர்வது முறைதானே? மிகு நெடுங்காலமாக வாழ்ந்த நாகரிக வாழ்க்கை பெற்ற நாடுகள் மிகச் சிலவே. இன்றைய ஆராய்ச்சியின் படி சமுதாய வாழ்க்கை இன்றைக்கு 50,000 ஆண்டு களுக்கு முன்னரே தொடங்கியது. ஆயினும், மனிதன் இவ்வுலகில் எவ்வெவ்விடங்களில் எவ்வெந்நிலையில் வாழ்ந்தான் என்பதை வரையறுக்கக்கூடவில்லை எனினும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்தோடு வாழ்ந்த சில நாடுகளை வரலாற்று ஆசிரியர்கள் கண்டுள்ளார்கள். மேலை நாட்டிலே நைல் நதிக் கரையில் அமைந்த எகிப்திய நாகரிகமும், பாபிலோனியா நாகரிகமும், மெசபட்டோமிய நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும், காவிரிக்கரை நாகரிகமும், சீன நாகரிகமும் அவற்றுள் சிறந்தனவாய் உள்ளன. இவற்றைப் பற்றி மேலை நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் பற்பல வகைகளில் ஆராய்ந்து பலப்பல நூல்களை எழுதியுள்ளார்கள் எனினும், காவிரிக்கரை நாகரிகமாகிய தமிழ் நாகரிகத்தைப்பற்றி அவர்கள் அதிகமாகக் குறிக்கக் காணோம், மொகஞ்சதாரோ, ஆரப்பா போன்ற நகரங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட பின் சிந்துவெளி நாகரிகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/57&oldid=1357292" இலிருந்து மீள்விக்கப்பட்டது