பக்கம்:தமிழக வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழக வரலாறு


உணர முடியாத வகையில் எத்தனையோ மக்கள் குடியேறி ஒன்றிக் கலந்து தமிழராய் வாழ்ந்துள்ளார்கள். எத்தனையோ வகையான அரசுகள் வந்து வாழ்ந்து அரசோச்சி அழிந்து விட்டன. இன்று தமிழகத்திலே உலக நாகரிகங்கள் அனைத்தையும் காண முடியும்.

சமய வரலாறு :

இதைப் போன்றே சமயத் துறையிலும் அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் பெரும் மாறுதல்கள் நடைபெற்றுள்ளன தமிழ் நாட்டு மக்கள் இன்ன சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறுதியிடப் பெறாவகையில் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்தார்கள். கடவுளைப் போற்றும் நெறி தமிழகத்தில் நெடுங் காலமாகப் பழக்கத்தில் இருந்த போதிலும், ‘அவர்கள் போற்றிய கடவுள் யார்? எப்பெயர் உடையவர்?’ என்பன போன்ற வினாக்களுக்கு விடைகாணல் அரிதாகும். தொல்காப்பியத்தில் கடவுள் குறிக்கப்படுகின்றாரேனும், அவர் பெயர் அறிய இயலாது “இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாத” வகையில் அவர்தம் கடவுளர் காண முடியாத நிலையில் இருந்தனர். பின்னர், சைவமும் வைணவமும் தலை தூக்கின. அடுத்துப் பெளத்தமும் சமணமும் நாட்டில் பரவின. பின்னர் இசுலாமியமும் கிறித்தவமும் கலந்தன. இப்படி நாள்தோறும் பிற நாட்டுச் சமயங்கள் இங்குக் கலந்து இந்நாட்டுச் சமயங்கள் என்னுமாறு தலை நிமிர்ந்து வாழ்கின்றன. வரலாற்றுக் கெட்டாத நெடுங்காலந் தொட்டு இன்றுவரை வளர்ந்த சமயக் கோட்பாடுகள் இங்கு நிலை பெறக் காரணம், தமிழர்தம் சகிப்புத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/60&oldid=1357312" இலிருந்து மீள்விக்கப்பட்டது