பக்கம்:தமிழக வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டு வரலாறு

59


தன்மையேயாகும் இந்திய நாட்டின் வடபகுதியில் சமயப் போரால் அழியும் நிலை காணும் நம் கண்முன் அமைதியிலே வாழும் தமிழ் நாட்டின் ஏற்றம் விளங்காமல் போகாது. ‘சமயப் பொறை’ என்ற சமூகப் பண்பாடு தமிழ் நாட்டுத் தனிப் பண்பாடு. எனவேதான் இன்று பல சமயங்கள். தம்முள் எத்தனை வேறுபாடுகள் இருப்பினும், ஒன்றிக் கலந்து மாறுபாடு இல்லாமல் இங்கு வாழ்கின்றன.

பண்பாடு :

சமயத்தைப் போன்றே எத்தனையோ நாகரிகங்கள், பண்பாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள், பிற இயல்புகள் இந்நாட்டில் குடியேறி இங்கேயே ஒன்றி வாழ்கின்றன. அவற்றின் கலந்த வாழ்வே இன்றைய தமிழக வாழ்வு. இப்படி ஒன்றிய ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்வதே ஒரு சிறந்த செயலாகும். எங்கோ பனி படர் பழங்காலந்தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் இடை வரையில் தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு நாட்டு மக்கள் வாழ்வையும் அதை ஒட்டிய பிற அமைப்புகளையும் ஆராய்வதே இன்றைய தமிழ் நாட்டு வரலாறு ஆகும். அக்கால எல்லையுள் நின்று ஒவ்வொரு காலத்திலும் நாடு எந்நிலையில் வாழ்ந்தும், வீழ்ந்தும் சரிந்தும் நிமிர்ந்தும் வந்துள்ளது என்பதைத் தெளிவாகக் காணலாம்.

பண்டைத் தமிழகம் :

தமிழ் நாட்டுத் தெளிந்த வரலாற்று எல்லை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதெனினும், அக்காலத்துக்கு முன்னும் வாழ்ந்த தமிழக வரலாற்றின் சிறு சிறு குறிப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றன. கற்காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/61&oldid=1357317" இலிருந்து மீள்விக்கப்பட்டது