பக்கம்:தமிழக வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தமிழக வரலாறு


கணமாக உருவாயிருக்க வேண்டுமானால், அதற்குமுன் எத்தனை எத்தனை இலக்கியங்கள் உருப்பெற்றிருக்க வேண்டும். இறையனார் களவியலுரையில் மூன்று சங்கங்கள் இருந்தன எனவும், அவற்றின் ஆயுட்காலம் பல ஆயிரம் ஆண்டுகள் எனவும் கூறப் பெற்றுள்ளன. களவியல் உரையில் கூறப்படுவன அத்தனையும் உண்மை என எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை. எனினும், கடைச் சங்ககாலமென அனைவராலும் ஒரு சேர ஒப்புக் கொள்ளப் பெறும் கி. பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் இலக்கியங்களும் அவற்றின் வழித்தோன்றிய இலக்கணங்களும் உள்ளன என்பதை யாரும் மறுக்க இயலாதே! இலக்கிய வரையறையும் பிறவெளி நாட்டார் குறிப்புகளும் ஒரு சேரக் காட்டும் இக்கடைச் சங்க காலத்திலேயே ஒருவாறு தமிழ் நாட்டு வரலாறு உருப்பெறுகின்றது எனலாம். எனவே, வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம் என்ற பகுப்பின் எல்லை தொல்காப்பியர் காலத்தோடு ஒன்றிய முந்திய சங்க காலத்தோடு முடிவு பெறும்.

சங்க காலம்

சங்க காலமே தமிழ் வரலாற்றின் பெற்காலம் எனலாம். சிலர் சங்க காலத்தைக் கி. பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகும் கொண்டுவரக் கருதினாலும், பல வரலாற்று ஆசிரியர் (மேலைநாட்டு வரலாற்றா சிரியர்களாகிய ‘ஸ்மித்’ போன்றார் உட்பட) சங்க காலத்தைக் கிறித்து சகாத்தத்தின் முதல் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அடக்குவர். ஏழாம் நூற்றாண்டில் நாட்டின் தெளிந்த வரலாற்றையும், இலக்கியம், கலை முதலியவற்றின் வரலாற்றையும் நோக்குவார்க்கு, சங்க காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலமேயாகும் என்பது நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/64&oldid=1357337" இலிருந்து மீள்விக்கப்பட்டது