பக்கம்:தமிழக வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழக வரலாறு

65


பல்லவர் ஆட்சியும் தமிழ் நாட்டில் நெடுங்காலம் நிலைத்திருக்கவில்லை. தமிழ் நாட்டுப் பழங்குடி மன்னராகிய சேர சோழ பாண்டியர்கள் நிலைகெடப் பல்லவர் தலை நிமிர்ந்திருந்தனர். பாண்டியரும் ஓரளவு உரிமையோடு தென் தமிழ் நாட்டு எல்லையில் ஆட்சி புரிந்தனர். பல்லவர் காலத்திலும் பின் வந்த சோழர் காலத்திலும் மேலைக் கடற்கரை ஓரத்தில் சேரர் பரம்பரையினர் ஆண்டு வந்தாரேனும், அவர்களுள் சிறக்க வாழ்ந்த உலகறி மன்னர்களைக் காணல் அரிது. அம்மேலை நாட்டு பகுதி தமிழ் நாட்டு நிலையினும் மாறுபட்ட ஒரு நிலைக்குச் சென்று கொண்டிருந்தது பல்லவர் ஆட்சி, அடுத்துத் தலையெடுத்த தஞ்சைச் சோழர்களால் வீழ்ச்சியுற்றது எனலாம். மேலும் வடக்கிலிருந்து சாளுக்கியரும் மேற்கிலிருந்து கங்கரும் பிறரும் பல்லவர் ஆட்சிக்கு முடிவு தேடினர். எனினும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் அடுத்து ஆட்சிக்கு வந்த சோழர் பரம்பரையின் காலமே வரலாற்றில் சிறந்த காலமாகும்.

சோழர் காலம் :

பல்லவர்க்கும் பாண்டியருக்குமிடையே ஒடுங்கிய சிற்றரசாய் இருந்த சோழர் பரம்பரையினர் ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் தலை தூக்க ஆரம்பித்தனர். அவர் தம் பழைய நகரங்களாய் விளங்கிய புகாரும் உறையூரும், ஆரூரும் அக்காலத்திய தலைநகராக மாறவில்லை. புதிய தஞ்சை உருவாயிற்று தஞ்சையைத் தலைநகராக அமைத்துக்கொண்டே விசயாலயன் பரம்பரையினர் தலையெடுத்தனர். அவர்கள் காலம் தமிழ் வரலாற்றின் மிக முக்கிய காலமாகும் ஒன்பதாம் நூற்றாண்டின் தலை தூக்கிய இல்வமிசத்தினர் பதின் மூன்றாம் நூற்றாண்டு வரை

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/67&oldid=1357356" இலிருந்து மீள்விக்கப்பட்டது