பக்கம்:தமிழக வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தமிழக வரலாறு


ஆட்சியும், தஞ்சையிலும் செஞ்சியிலும் மராட்டியராட்சியும் தமிழகத்தில் பெருமாறுதலை உண்டாக்கி விட்டன என்று சொல்வதற்கு இல்லை என்றாலும், அவர்கள வருகை தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விட்டதென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த இருண்ட வேளையிலேதான் மேலை நாட்டுப் போர்த்துக்கீசியரும், டச்சுக்காரரும், ஆங்கிலேயரும் தமிழ் மண்ணிலும் மேலைக் கடற்கரையிலும் கால் வைத்தனர். தமிழ் நாட்டு வரலாற்றுத் தொடக்கத்தில் வாணிபத்தின் பொருட்டு வந்த கிரேக்க யவனரைப் போன்றே இவர்களும் இங்கு வந்தார்களேனும், இங்கு வந்து வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட சூழ்நிலை காரணத்தால் இங்கேயே தங்கி நாட்டைக் கைப்பற்றி ஆளவும் தொடங்கி விட்டனர். தமிழ்நாடு அந்த மேலை நாட்டு வாணிப ஆட்சியாளருக்குப் பலமுறை போர்க்களமாகி நின்றது. தென்னாட்டு மைசூரிலும் ஆர்க்காட்டிலும் ஆண்ட இசுலாமிய மன்னரும், கடல்வழி வந்த மேலை நாட்டவரும், அவர்கள் இடையில் நின்ற விசயநகர மராட்டிய நாயக்க மரபினரும் பண்டைத் தமிழர் தம் வாழ்வினைப் பல வகையில் நிலைமாறும்படிச் செய்து விட்டனர். சென்ற இரண்டு நூற்றாண்டுக் காலத்தில் ஆங்கில ஆட்சி நிலை பெற்று ஓரளவு அமைதி கண்டோம் என்றாலும், அதற்கு முன் இரண்டொரு நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டு வரலாறு கொந்தளிப்பாகவே இருந்தது.

மேலை நாட்டார் ஆட்சி :

வாணிபத்தின் பொருட்டு வந்த மேலை நாட்டினருள் தலை தூக்கியவர் ஆங்கிலேயரே. அவர் காலத்தில் இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/70&oldid=1357373" இலிருந்து மீள்விக்கப்பட்டது