பக்கம்:தமிழக வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழக வரலாறு

69


வரை இராத வகையில் பரந்த பாரதம் இமய முதல் குமரி வரை ஒரே ஆட்சியின் கீழ்ப்பட்டது. தமிழ் நாடு ஆங்கில ஆட்சியில் பல நன்மைகளையும் தீமைகளையும் விரவிப் பெற்றது. சமயத் துறையில் இசுலாமியமும் அடுத்துக் கிறிஸ்துவமும் நிலை பெற்று வளர இடந்தந்தது. தமிழ்மொழி மேலை நாட்டுப் பாதிரிமார்களைப் பற்றி ஈர்த்து அவர்களைத் தமிழராகவே வாழச் செய்தது. அந்த வகையில் தமிழும் தமிழ் நாடும் வந்தவரைச் சொந்தக்காரராக்கித் தன் வரலாற்று நெறியை மாற்றியும் திருத்தியும் அமைத்துக் கொள்ளத் தயங்கவில்லை.

உரிமை வேட்கை :

பரந்த பாரத நாடு விடுதலை பெற வேண்டும் என்ற விருப்பத்தால் இந்த நூற்றாண்டிலும் சென்றநூற்றாண்டிலும் நாட்டில் பல அமைதிப் போர்களும், ஆரவாரப் போர்களும் நடைபெற்றன. இணைந்த தமிழகமும் அந்த உரிமைப் போராட்டத்தில் பெரும் பங்கு கொண்டது. ஆங்கிலேயருக்குத் திறைகொடா இயக்கம் தமிழ்நாட்டில் தொடங்கிற்று கட்டபொம்மனும் பிறரும் ஆங்கில ஆட்சித் தொடக்கத்திலேயே வரிகொடா நிலையில் நின்றனர். பின் உரிமை வேட்கை மிகுந்த காலத்தில் நாட்டிலேயே பெருங் கிளர்ச்சி உண்டாயிற்று. ஆங்கில வணிகருக்கும் அரசியலாருக்கும் எதிராகக் கப்பல் கம்பெனி தொடங்கிய வ.உ.சி. அவர்கள் தமிழரல்லவா! இப்படித் தமிழகம் பரந்த பாரதநாட்டு உரிமைப் போரில் பங்கு கொண்ட வரலாறும் அறிய வேண்டுவதாகும்.

இறுதியாக உரிமை பெற்ற பாரதத்தின் ஓர் அங்கமாக, இழந்த குமரி எல்லையைப் பெற்று, வேங்கடத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/71&oldid=1357380" இலிருந்து மீள்விக்கப்பட்டது