பக்கம்:தமிழக வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தமிழ் நாட்டு வரலாறு


இழந்து, இன்று மக்கள் சுய ஆட்சி முறையில் சட்ட சபைகளின் வழியே தமிழ் நாடு தன் வாழ்வை நடத்தி வருகின்றது.

இதுவரை கண்ட ஆட்சி முறைகளின் வழி அவ்வல்லரசர்களைப் பற்றி மட்டும் நாம் எண்ணிப் பார்ப்போமாயின், அது வரலாறே ஆகாது. சங்ககாலம் தொடங்கி இன்று வரை வாழ்ந்த ஒவ்வொரு பேரரசின் காலத்திலும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் வாழ்ந்தமக்களின் வாழ்க்கை முறை, சமுதாய வளர்ச்சி, வாணிபம், அரசியல், பொருளாதாரம், பிற எல்லாவற்றையும் தொகுத்துக் காண்பதே இந்த வரலாற்று முறையின் முக்கிய நோக்கமாகும். வரலாற்று எல்லையில் நின்று வசதிக்காகவும் முறைப்படுத்தவும் அரச பரம்பரைகளைக் கால எல்லைகளாகக் கொண்ட போதிலும், அந்த அரச பரம்பரைகளை மட்டும் பாராது மக்கள் வாழ்வைக் காண்பதே இனிநாம் செய்யப் போவதாகும். தொடர்ந்து ஒவ்வொரு கால எல்லையிலும் தமிழகம் எவ்வெவ்வாறு இருந்தது என்பதைக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/72&oldid=1357384" இலிருந்து மீள்விக்கப்பட்டது