பக்கம்:தமிழக வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தமிழக வரலாறு


இக்கால எல்லையே என்றும் கூறிப் பரந்த நிலப்பரப்பு இருந்ததென்ற உண்மையை மறுப்பாரும் உளர். எனினும் மேலை நாட்டு ஆய்வாளர் கூற்றும் நம் தமிழ் இலக்கியத் தொடர்களும் பரந்த நிலப்பரப்பு இருந்த உண்மையை நிலை நாட்டுகின்றன. ‘இழந்த லெமூரியாக் கண்டம்’ என்ற நூலில் அதன் ஆசிரியர் பரந்த நிலப்பரப்பு உண்மையை விளக்கி எழுதுகின்றார்[1] சிலப்பதிகாரம் குமரிக்கோடும் பிறவும் கடலால் கொள்ளப்பட்டதை லிளக்கிக் காட்டுகின்றது.[2] இறையனார் அகப்பொருள் உரை இவற்றிற்கெல்லாம் விளக்கம் தந்தது போன்று நாற்பத்தொன்பது நாடுகளைப் பற்றிக் குறிக்கின்றது. வடமொழி தமிழ்ப் புராணங்கள் பலவும் தெற்கே பெரும்பகுதிகள் இருந்தாகவும் அவற்றுள் அசுரர்கள் வாழ்ந்ததாகவும், காலப்போக்கில் அவை மறைந்ததாகவும் குறிக்கின்றன. அவை கூறும் அத்தனையும் உண்மை என்று கொள்ள இயலாவிடினும், பரந்த நிலப்பரப்பு இருந்தது என்று கொள்வதில் தவறில்லை எனலாம். உலகத் தோற்றத்தைப் பற்றிக் கூறும் இன்றைய மேலை நாட்டு ஆராய்ச்சியாளர் இந்த நில அமைப்பு எத்தனை முறைகள் மாறி இருக்கின்றது என்பதைப் படங்கள் வாயிலாகவே விளக்கி உள்ளனர்.[3] எனவே, இந்து மகா சமுத்திரம் நிலமாய் இருந்திருப்பதில் வியப்பில்லையன்றோ!

உயிர்த் தோற்ற வளர்ச்சி

பரந்த நிலப்பரப்பும் சுற்றிச் சூழ்ந்த கடலும் தமிழ் நாட்டுக்கு எல்லைகளாகவும் குறியீடாகவும் அமைந்து


  1. The Lost Lemuria குமரிக் கண்டம்-அப்பாத்துரை
  2. சிலப்பதிகாரம். 11; 19-22 அடிகள்
  3. The Biography ot Earth, by George Gomow
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/74&oldid=1357392" இலிருந்து மீள்விக்கப்பட்டது