பக்கம்:தமிழக வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

75


கின்றன. ஆனால், மனிதன் மட்டும் ஒரு கருவில் ஒருவனாய்த் தோன்றிச் சில காலமாவது சாகாதிருக்கும் வழித் துறைகளை ஆராய்கின்றான்.[1]

ஆதி மனிதன் :

இன்றைய இருபதாம் நூற்றாண்டின் மனிதனுக்கும் ஆதிமனிதனுக்கும் எத்தனையோ வகையில் வேறுபாடுகள் உள்ளன. முதல் மனிதன் விலங்கினும் வேறாய் நின்று முயன்று முயன்று இயற்கையும் செயற்கையும் கலந்த ஒரு வாழ்விலே வாழ்ந்திருப்பான். நிலப்பிரிவுகள் தோன்றிய பிறகே மனித இனம் தோன்றியிருக்கும் அந்த ஆதி மனிதனும் பிற உயிர்களினும் உடற்கூற்றில் மாறுபட்டவனாகவே இருந்திருப்பான், எனவே, தனித்து வாழ வேண்டும் என்ற உணர்வு தோன்றியிருக்கும். அவன் உடல் அமைப்பும் பிற உயிர்களைப் போன்று புற இயற்கைகளைத் தாங்க வசதி அற்றதாகவே இருந்திருக்கும். அவன் பெற்றிருந்த உள்ள உணர்ச்சியோ, அறிவோ, அன்றி மூளையோ அவனுக்கு அந்தக் காலத்திலேயே உதவியிருக்கும். உள்ளத் தூண்டுகோலும் பிற புற உலக அனுபவங்களும் சேர்ந்தே அவனை வளர்த்து வந்தன எனலாம். பிறகு அவனது பேச்சும் அதன் வழி உருவான மொழியும் அவனைப் பிற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டிவிட்டன.

மொழியும் கலையும் :

மொழி ஏற்பட்ட காலம் எது எனத் திட்டமாகக் கூற முடியாவிட்டாலும், அது மனித வாழ்வில் ஒரு திருப்பு மையமாய் அமைந்துவிட்டது. இன்று நாம் பேசும் இதே வகையில் ஆதி மனிதன் பேசினான் என்று


  1. Man Makes Himself, by Gorden Childe.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/77&oldid=1357411" இலிருந்து மீள்விக்கப்பட்டது