பக்கம்:தமிழக வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தமிழக வரலாறு



மனிதன் வில்லும் அம்பும் கொண்டு வேட்டையாடக் கற்றுக்கொண்ட காலம் எது என்று திட்டமாகக் கூற முடியாவிட்டாலும், அது செம்புக் காலத்துக்கும் முற்பட்டதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காட்டில் வேட்டையாடி விலங்குகளையும் பறவைகளையும் கொன்று அப்படியே தின்று காலம் கழித்த மனிதன், அவற்றை நெருப்பி லிட்டுப் பக்குவப்படுத்திக் கொண்ட விந்தை இன்னும் யாருக்கும் புரியாத ஒன்றுதான். மேலை நாட்டுக் கலைஞரான சார்லஸ் லாம்பு (Charles Lamp)[1] என்பார் இந்நிகழ்ச்சியைச் சீன நாட்டுக் கதைமேல் ஏற்றிக் கூறினும், அது வெற்று வேடிக்கையேயன்றி வரலாற்றுக்கு ஒவ்வாதது. எப்படியோ நெருப்பின் உபயோகத்தை அறிந்தான் மனிதன்; இறைச்சிகளை மட்டுமன்றி, பிற காய், கிழங்கு முதலிய உணவுப் பொருள்களையும் நெருப்பின் வழிச் சீராக்கி உண்டான்

பயிர்த்தொழில்:

கனியும் காயும் கிழங்கும் உண்ட மனிதன், நெல்லும் கம்பும் பயிரிடக் கற்றுக்கொண்டான் பறவைகள் எங்கிருந்தோ கொண்டு வந்து எங்கோ இறைத்துச் செல்ல, அதன் வழி விளையும் நெல், கம்பு முதலியவற்றைக் கண்டான் மனிதன்; அதை உண்டு பார்த்தான்: பின்பு அதைத் தானும் ஏன் பயிரிடலாகாது என நினைத்தான்; உழவும் கலப்பையும் அவனுக்குத் தெரியாதன வாயினும், எப்படியோ பயிரிடக் கற்றுக் கொண்டான்; அதற்குத் தேவையான நீர் வேண்டி ஆற்றங்கரைகளை அடைந்தான் அந்த நீர் கொண்டு உழவுத் தொழிலைத் தொடங்கினான் மனிதன். நைல், சிந்து, காவிரியாறுகளின் நாகரிகங்களும், மெசபட்டோமிய சீன நாகரிகங்களும் இவ்வகையில் தோன்றிய ஆற்றங்கரை நாகரிகங்-


  1. 1. A Dissertation upon Roast Pig, p. 19
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/82&oldid=1375638" இலிருந்து மீள்விக்கப்பட்டது