பக்கம்:தமிழக வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

81


களே, இன்று வரலாற்றில் சிறந்த நாகரிகங்களாகப் போற்றப்பெறும் இந்த ஆற்றங்கரை நாகரிகம், மனிதனை மேலும் கூடி வாழும் உணர்விற்கு ஈர்த்துச் சென்றது எனலாம். அந்தக் கூடி வாழும் வாழ்க்கை மனித இனத்தோடு மட்டுமல்லாது, பிற விலங்கினங்களோடும் கூடிவாழ வைத்தது. உழவனுக்கு வேண்டிய ஆடும் மாடும் அவன் அன்று தேடிச் சேர்த்து வைத்துக் கொண்ட உயிரினங்கள் தாமே! அவன் தன் உழவுக்கு எந்த எந்த உயிரினங்கள் நன்கு உதவும் என்று ஆராய்ந்து அவற்றை மெல்லப் பழக்கிக்கொண்டான். இன்று வீட்டு விலங்குகளாகிய ஆடும் மாடும் அன்று இவ்வாறு இருந்திருக்க வழியில்லை பிற விலங்குகளைப் போன்று காடு மேடுகளிலெல்லாம் கண்டபடி சுற்றிக் கட்டுக்கடங்காது மேய்ந்து, போரிட்டு மடியும் கொடிய விலங்குகளோடு விலங்காகவே அவைகளும் அன்று வாழ்ந்திருந்திருக்கும். ஆனால், விவசாயத்தின் பலன் கண்டு, அதைப் பெருக்க நினைத்த மனிதன், தன்னை ஒத்த பிற மக்களது உதவியை நாடியதோடு அன்றி, இந்த விலங்குகளின் உதவியையும் நாடினான்; காட்டு விலங்கை வீட்டு விலங்காக்கினான். உழவு செய்யவும் எருவிடவும், வண்டி இழுக்கவும், இன்ன பிற உழவு வேலைகள செய்யவும் மனிதன் விலங்கினத்தைத் தன்னோடு ஒட்டி வாழப் பழகும் வழிக்குக் கொணர்ந்தான் நாய் போன்ற விலங்குகளையும் தனக்குத் துணையாகச் சேர்த்துக்கொண்டான். ஆம், மனித வரலாற்றில் உழவினைத் தொடங்கிய அந்தக்காலம் ஒரு சிறந்த பொற்காலம் எனலாம்.

முன்னைய மனிதன் நாளாக ஆக எத்தனையோ பொருள்களை உபயோகித்தான். பருவத்தை அளந்-

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/83&oldid=1357444" இலிருந்து மீள்விக்கப்பட்டது