பக்கம்:தமிழக வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

83



செய்வதையும், அத்தொழிலுக்குப் பயன்படுத்தப்படுவனவாய மாடுகள், சக்கரவண்டி ஆகியவற்றின் உபயோகத்தையும் அறிந்தான் என்பர்.

கூட்டு வாழ்க்கை:

பயிர்த்தொழில் தனி மனிதனால் நடைபெறுவதன்று. அதற்குக் கூட்டு வாழ்க்கை அவசியம். எனவே, அந்தக் கி. மு. 6000க்கு முன்போ பின்போ மனிதன் கூடி வாழக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். மேலே செம்பும் இரும்பும் உபயோகித்த காலத்தில் மனிதன் கூடி வாழக் கற்றுக்கொண்டதை அறிந்தோம். அதை அடுத்துக் கூடி வாழும் வாழ்க்கையைக் கற்பித்தது உழவேயாகும். அந்த உழவுக் காலத்தில் மழை வருவதையும், விதைக்க வேண்டிய நாள்களையும், சூரிய சந்திரரையும் அவன் எண்ணிக் கணக்கிட்டிருப்பான்; அவைகளைக் கடவுளராகவே போற்றியிருப்பான். ஆரியர் பழைய வாழ்வில் அவைகளெல்லாம் கடவுளராகப் போற்றப்பட்டதை வேதம் கூறுகிறதன்றோ! ஆம்! மனிதன் தன் வாழ்வை எண்ணிய பிறகு அதில் பெறும் வெற்றி தோல்விகளை எண்ணிய பிறகு-கடவுள் உணர்வையும் பெற்றிருக்க வேண்டும். கி. மு. 5000ல் சமய உணர்ச்சி தோன்றியிருக்க வேண்டும்.[1] தமிழ் நாட்டுச சமயத் தலைவர்கள் தாங்கள் வணங்கும் கடவுளரைப் பற்றியும், அவர் கோயில் கொண்ட இடங்களையும் கூறும் போதும் கால எல்லைக்கு அப்பாற்படுத்தியே கூறுகின்றார்கள். எனவே, தமிழ் நாட்டில் சமய உணர்ச்சியும், கடவுள் வழிபாடும் வரலாற்று எல்லைக்கு முன்னரே தோன்றின என்பது உறுதி, ‘அஞ்சி யாகிலும் அன்பு பட்டாகிலும்’ ஆண்-


  1. Man Makes himself, by Garden Childe
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/85&oldid=1375643" இலிருந்து மீள்விக்கப்பட்டது