பக்கம்:தமிழக வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தமிழக வரலாறு


டவனை வணங்கத் தோன்றுகிறது என்பார்கள் சமயத் தலைவர்கள். ஆம்! ஆதிமனிதன் பிற துன்பங்களுக்கு அஞ்சியே–சூரியன் மழை முதலியன, அளவுக்கு மீறி அல்லல் விளைக்கும் என்று அஞ்சியே–அவைகளை வணங்கியிருப்பான். இன்றும் பழங்காலத் தெய்வங்களை வழிபடும் நாட்டு வழிபாடு–மாரி முதலிய தெய்வங் களைப் போற்றும் நெறி–பெரும்பாலும் அச்சத்தால் நிகழ்வதைக் காண்கின்றோம் பின்பு அன்பின் வழிப் பூசனை உருப்பெற்றிருக்கும். எப்படியும் தனக்கு மேம்பட்ட ஒன்று தன் சக்தியைக் கடந்த நிலையில் இருக்கின்றது என்ற உணர்வு மனித உள்ளத்தில் இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி இருக்கும் என்பது வரலாறு கண்ட உண்மையாகும். எகிப்திய, பாபிலோனிய நாகரிகச் சின்னங்களும் தமிழ் நாட்டு இலக்கியங்களும் இவ்வுண்மையை விளக்குகின்றன எனலாம்.

சமுதாயம் :

இப்படிச் சமய வாழ்வும் கூட்டு வாழ்வும் ஒன்றிக் கலந்தே அந்த நாளில் மனித சமுதாயத்தை உருவாக்கின எனலாம். பிறவற்றிற்கு அஞ்சிச் சேர்ந்து வாழ்வதும், தம் உணவைத் தேடிக்கொள்ள ஒத்துழைப்பதும் இயற்கைதானே? அந்தக் கூட்டு வாழ்வில் உறவு முறையும், இனப் பாகுபாடும், கலைவழி வேறுபாடும் தோன்றி வளர்ந்து விட்டன எனலாம். கி. மு. 6000-ஆம் ஆண்டில் தோன்றிய அந்த இனப் பிரிவும், பிற பிளவுகளுந்தாம் இன்று உலகில் பல்வேறு வகைப்பட்ட பிரிவுகளுக்குக் காரணம் எனலாம். இனப் பூசல்களும், சமயப் போர்களும், நாட்டுப் போர்களும் இந்த அடிப்படையான இன வழியில் தோன்றியதை அன்றைய மனிதன் வந்து கண்டால், ‘அந்தோ! கூடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/86&oldid=1357469" இலிருந்து மீள்விக்கப்பட்டது