பக்கம்:தமிழக வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

87


இப்படி வளர்ந்துகொண்டே வந்த மனித சமுதாயம் தோன்றிய இடத்திலிருந்து பலவிடங்களுக்குப் பிரிந்து சென்றதா, அன்றி ஒரே சமயத்தில் உலகின் பல பாகங்களிலும் தோன்றி வளர்ந்ததா என்பதைப் பற்றி இன்னும் திட்டமான முடிவு காண இயலவில்லை. எனினும், சீனம், தமிழகம், சிந்து வெளி, மெசபட்டோமியா, கிரிஸ், எகிப்து, உரோம் முதலிய நாடுகளில் மிகு பழங்காலத் தொட்டு ஒன்றை ஒன்று ஒத்த நாகரிக வளர்ச்சியும் பண்பாடும் கலை உணர்ச்சியும் பிற இயல்புகளும் இருந்தன என்பர் வரலாற்று ஆய்வாளர்.

நாகரிகங்கள் :

தனிப்பட்ட வாழ்விலே இருந்து கூட்டு வாழ்வினைப் பற்றிய மனிதன் சிறு ஊர்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்தான் என்றும், அவ்வாழ்வே ஆற்றங்கரை நாகரிகத்தின் அடிப்படை என்றும் கண்டோம். அந்தக் கூட்டு வாழ்வே பின்பு பெருநகர வாழ்வினையும் (The Urban evolution) உண்டாக்கியது எனலாம். வெற்று உழவாளிகள் என்பது போய், பிற தொழில் வளர்க்கும் மற்றவரும், அவற்றின் வழி வாணிப வாழ்க்கை செய்பவரும், மேலே கண்ட அரச வாழ்க்கையில் உள்ளவரும், அவர்க்குத் துணையாய் உள்ளவர்களும் சேர்ந்து வாழ்ந்த ஒன்றே நகர வாழ்வின் அடிப்படையாய் அமைத்தது. மலைமேலும், மலை அடிவாரத்திலும், ஆற்றங்கரையிலும், காடுகளிலும், கடற்கரையிலும் வாழ்ந்த மக்கள் அவ்வவ்வாறு தம் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்டு நாடு நகரங்களும் கண்டு வாழ்ந்தார்கள். இது உலகில் கானும் எல்லா நாடுகளுக்கும் ஏற்ற ஒன்றுதான். எனினும், தமிழன் அவற்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/89&oldid=1357508" இலிருந்து மீள்விக்கப்பட்டது