பக்கம்:தமிழக வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தமிழக வரலாறு


சிறப்பறிந்து நிலங்களைத் திணைகளாக்கி, அவற்றின் ஒழுக்கங்களை வரையறுத்து, நால்வகை நிலத்தையும் பிணைத்து, ‘நானிலம்’ என்றே உலகத்துக்குப் பேரிட்டுப் புகழ் பெற்றான். குறிஞ்சியும், முல்லையும் மருதமும், நெய்தலும் மண்ணுக்கும் கல்லுக்கும் மட்டும் பெயராய் அமையாது, அங்கங்கு மக்கள் மேற்கொள்ளும் ஒழுக்கங்களுக்கே பெயராய் அமைந்ததை எண்ணிப் பார்த்தால் ஆதி தமிழனது பண்பாடு நன்கு விளங்கும். இவ்வாறு அமைந்த நிலப் பிரிவுகளில் நாடும் நகரங்களும் சிறந்து ஓங்கின. (கோல்டன் சைல்டிர்) என்பார் இந்த அமைப்புகளில் கூட்டு இனமாய் அமைந்து, மனிதன், சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, காலவரையறைகளைத் திட்டமாகக் கணக்கிட்டு, வரையறுக்கப்பட்ட ஓர் அரசியல் அமைப்பின் கீழ் வாழ்ந்த காலம் கி.மு. 1800க்குப் பிறகே என்றும் அது பாபிலோனியாவில் நிகழ்ந்ததென்றும் கூறுவர். தமிழ் நாட்டு வரலாற்றுக்கும் இந்தக் கால எல்லை பொருந்தும் எனலாம். தமிழ் நாட்டு வரலாற்று அறிஞர் அதைத் தொல்காப்பியக் காலம் எனக் கணக்கிடுவர்.

கோயில் வாழ்வு :

அந்தக் கூட்டு வாழ்க்கையில் கோயில் வாழ்க்கை முக்கிய இடம் பெற்றது. கோயில்கள் என்பன இப்போது நாம் காணும் அளவிற்குக் கோபுரம் கொண்டு மதிற்கவர் சூழ்ந்தவை அல்லவெனினும், அவை சமுதாய வாழ்வில் முக்கிய இடம்பெற்றது என்பதில் ஐயமில்லை. சிலப்பதிகாரத்தும் பிற இலக்கியங்களிலும் காணும் எத்தனைக் கோயில்களின் அமைப்புக்கள் அவற்றின் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாயின என்று


1. Man Makes Himself by Golden Childe

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/90&oldid=1357515" இலிருந்து மீள்விக்கப்பட்டது