பக்கம்:தமிழக வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

89


காண்கிறோம். அக்கோயில்கள் வழி அந்தக் காலத்துப் பொருளாதாரத்தை உணர்ந்துகொள்ள இயலும்போலும் பிற்காலச் சோழர் காலத்துக் கோயில்கள் கலை வழியும் கல்வெட்டுக்கள் வழியும் அக்கால வரலாற்றையும் பொருளாதார நிலையையும் உலகுக்கு உணர்த்துவதை நாம் அறிவோம்; அதைப் போன்றே அந்தப் பழங்காலக் கோயில்கள் மக்களது பொருளாதாரத்தை விளக்கின எனலாம். கோயிலுக்கே ஊரில் பெரும்பகுதியான நிலங்கள் சொந்தமாம்; பெரும் பொருளும் உரியதாம். அக் கோயிலிலிருந்து பிறர் தேவையான போது பணம் வாங்கிப் பயன்படுத்துவார்களாம்![1] ஆயினும், அந்தப் பணம் எந்த வகையில் இருந்தது என்பதைச் சொல்ல இயலாது. எனினும், பண்டமாற்று வகையும் நாணயப் புழக்கமும் உலக வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் நெடுங்காலமாகவே இருந்தன என்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. இந்தக் கோயில்களுக்குப் பூசாரிகளும் அவர்களைச் சார்ந்து கோயிற்பணி புரிவோரும் இருந்தனர் என்பதும் அறியத்தக்கது.

அறிந்த பிற:

பாபிலோனியாவிலும் சிரியாவிலும் நகர அமைப்பும் அதன் வழி வாணிப வளனும் கி.மு. 2000க்கு முன்பே பெருகின என்பர். அக்காலத்தை ஒட்டித் தமிழ் நாட்டிலும் வளர்ந்தபிற உலகப் பகுதிகளிலும் வாணிப வளனும் தொழில் வளர்ச்சியும் செழிப்புற்றிருக்க வேண்டும், வாணிபம் பெருகப் பெருக, அதன் வழியே குறியீடுகளும் அவற்றிற்கெனப் பல்வேறு தனித்த பொருள்களும்


  1. Man Makes Himself by Golden Childe, P, 154
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/91&oldid=1375645" இலிருந்து மீள்விக்கப்பட்டது