பக்கம்:தமிழக வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தமிழக வரலாறு


முதலிய நாடுகளிலும், மக்கள் நாகரிகத்தையும் வாழ்க்கை வரலாறுகளையும் அறிந்து கொள்ள இயலும்.

தமிழ் நாட்டில் பழங்காலத்தில் கடவுள் வாழ்த்தொடு நாகர் வணக்கமும் இருந்தது என்பது தெரிகிறது.[1] ‘நாகர் யார்? அவர் தம் நாடு யாது?’ என்பன போன்ற குறிப்புக்கள் நன்கு விளக்கமாக இல்லையேனும் நாகம் எனும் பாம்பு வணக்கம் மிகு பழங்காலத்துத் தமிழ்நாட்டு வழக்கம் என்பது ஒருதலை, பின் நாகர் ஒரு வகைச் சாதியராக, அவர்கள் வாழும் இடம், மலை முதலியன பற்றிப் பின்வந்த மணிமேகலை குறிக்கின்றது.

அந்தப் பழங்காலத்தில் தமிழ் நாட்டுக்கும் சிறிய ஆசியாவுக்கும் உள்ள பல்வேறு தொடர்புகளைத் திரு. நீலகண்ட சாஸ்திரியாரவர்கள் கூறியுள்ளார்கள்.[2] பாலஸ்தீனப் புதை பொருள்களும், ஆதிச்ச நல்லூர்ப் புதை பொருள்களும் இரு நாடுகளுக்கும் கி.மு. 12-ஆம் நூற்றாண்டில் இருந்த தொடர்பினைக் காட்டவல்லன எனக் குறிக்கின்றார்: ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நெற்பயிரிட்டு உணவாக்கி உண்டு நாகரிகத்தில் வாழ்ந்தார்களென்றும் குறிக்கின்றார். ஆதிச்ச நல்லூரில் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் வேறு பல இடங்களிலும் (செங்கற் பட்டு முதலியன) இத்தகைய தாழிகள் கிடைக்கின்றன. இந்தியா முழுவதிலும் திராவிட மொழிச் சிதறல்கள் இருந்துள்ளன எனக் குறிக்கின்றார்.[3] அது மட்டுமின்றி. அந்தக் காலத்தில் திராவிட நாகரிகம் உலகில் பல பாகங்களிலும் பரவி இருந்தது என்பதையும் நன்கு காட்டு-


  1. A History of South India—K. A. Neelakanda Šastri, р. 61
  2. ibld p. 62
  3. 4, ibid, p. 28
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/94&oldid=1357541" இலிருந்து மீள்விக்கப்பட்டது