பக்கம்:தமிழக வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்

97


மற்றொன்று மெளரியர் பரம்பரை. இவர்களைத் தவிர வேங்கடத்துக்கு வடக்கே வாழ்ந்தவேற்று மொழியாளர்களையும் அந்த இலக்கியங்கள் குறிக்கின்றன.

‘பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்

மொழிபெயர் நேஎத்த ராயினும்’

(அகம் 211)

என்ற மாமூலனாரின் அடிகள் வேங்கடத்துக்கு வடக்கே வேற்று மொழியாளர் வாழ்ந்தனர் என்பதை வலியுறுத்துவன. அவ்வாறு வாழ்ந்த வேற்று மொழியாளர்களோடு தொடர்பு கொண்டிருந்தது அன்றைய தமிழ் நாடு. போரும் பிணக்கும் கொண்டு அவரோடு மாறுபட்டுக் கலாம் விளைக்கும் வகையில் வடக்கும் தெற்கும் அன்று இருந்தன என்று சொல்ல முடியாது. வடநாட்டுச் செல்வ வளத்தைப் புகழ்ந்து பாடுகின்றன. சங்கப் பாடல்கள். எனவே அன்றைய தமிழ்நாடு வடநாட்டோடு இணையவில்லை. ஆயினும், நட்பு முறையில் அதனோடு உறவாடி இருந்தது என்பது தெரிகிறது.

நந்தரும் மோரியரும் :

இந்திய வரலாற்றில் முதன் முதல் பேசப்படுகின்ற அரச பரம்பரை இரண்டு. ஒன்று நந்தர் ஆட்சி இது கி. மு. 413-ல் தொடங்கியது. நந்தர்கள் சில காலம் வடநாட்டைச் சிறக்க ஆண்டார்கள். எனினும் கங்கைப் பெருவெளியில் அடுத்துத் தோன்றியவர்கள் — அல்லது குடியேறியவர்கள் — மெளரிய வமிசத்தவர்கள் அவருள் முதல்வனாகச் சிறந்தவன் சந்திரகுப்தன் இவன் அலெச்சாண்டரைத் தட்சசீலத்தில் கி. மு. 316 அல்லது 325-ல் சந்தித்தான். அலெக்சாண்டரே சந்திரகுப்தனை நந்தர் நாடாகிய மகதத்தின்மேல் படை எடுக்கச்-

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/99&oldid=1357677" இலிருந்து மீள்விக்கப்பட்டது