பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முயன்றுள்ளார். பிடி மிதி வழுதுணை பெரும் பெயர்த் தழும்பன்' என்ற வரியில் உள்ள வழுதுணை என்ற சொல்லின் இடத்தில், 'வழுதி துணை' என்ற சொல் இருந்ததாகத் தாம் ஒரு பிழை செய்து விட்டு" வழுதி துணை என்ற பாடல் எழுதினர் வழுவே துணைக் கொண்டு வழு துணை யென வரையப் பட்டதுவேறு. வேறு பொய்ப் பொருள் கோடற்குக் காரணமாயிற்றென்க10 என பிறர் மேல் பழி போட்டுள்ளார். வழுதி துணை' எனக் கொண்டால், தளை கெட்டும் போவதோடு, பொருட் சிதைவும் நேர்வதை, அவர் நினைவில் கொண் டிலர் போலும் ! அவன் வாய்மொழித் தழும்பன்' என அழைக்கப்பட்டி ருப்பது அடுத்தகாரணம், வாய்மொழி கோசர்க்கு மட்டுமே உரிமையுடைய ஒன்றன்று சாரணர்க்கும், வார்த்திகனுக் குய் உரிமையுடையது அது என்கிறார் இளங்கோ அடிக ளார். சாரணர் வாய்மெரழி வார்த்திகன் கொணர்ந்த வாய்மொழி’18 என்பன காண்க. வாய் மொழியாளர் என்ற பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வாய்மொழி கேட்டு அதன்வழி நடப்ப வர் என்கிறார் மதுரைக்காஞ்சி ஆசிரியர் மாங்குடிமருதனார் 'கோசர் இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப 14 என்ற வரியினைக் காண்க ஆகவே அதுவும் பொருந்தும் காரணம் ஆகாது. தழும்பன் வேழம் மிதித்த தழும்பு உடையான், வேழத் தின் மீதல்லது வாள் எடோம் என்பது கோசர் கொள்கை: ஆகவே தழும்பன் கோசர் மரபினன் என்பது திருவாளர் அய்யங்கார் அவர்கள் எடுத்து வைக்கும் இறுதிக்காரணம். போர்க் களத்தில், யானையை, அதிலும் ஆ ண் யானையை, அதிலும் பகைவேந்தன் ஊர்ந்துவரும் шут 652 sат 92.