பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யைத் தேடிப் போர் தொடுப்பது, கோசர் குலத்தவர்க்கு மட்டுமே தனி உரிமை உடைய ஒன்று அன்று. அது களம் புகும் காளையர் அனைவர்க்கும் உரிய தனிச் சிறப்பாம். “களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' என்கிறார் பெண்பால் புலவர் பொன் முடியார். வேந்துர் யானைக் கல்லது, ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேலே' என்கிறார் ஆவூர் மூலங்கிழார். 'மடப்பிடி புலம்ப,இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கு "1" என்கிறார் எருமை வெளியனார்; எஃகம், வேந்துார் யானை ஏந்து முகத்ததுவே '’18 என்கிறார் கோவூர் கிழார் 'கறையடி யானைக் கல்லது, உறை கழிப்பு அறியான் வேலோன்' என்கிறார், பெயர் அறிய மாட்டாப்புலவர் ஒருவர். பெரும் சமத்து அண்ணல் யானை அணிந்த பொன்செய் ஒடைப் பெரும் பரிசிலனே'.0 என்கிறார் தண் கால் பொற்கொல்லனார், இருங்கடல் தானை வேந்தர் பெருங்களிற்று முகத்தினும் செலவானா தே' என்கிறார் விரியூர் நக்கனார். 'யானை ஒருகை உடையது; எறிவ லோ யானும் இரு கை சுமந்து வாழ்வேன்' என்கிறது தொல்காப்பிய மேற்கோள் செய்யுள் ஒன்று. மேலே கூறிய இவ் வகச் சான்றுகள் எல்லாம், களிறு எறிதல், களம் புகும் காளையர் க்கெல்லாம் பொது இயல்பு என்பதையே உறுதி செய்கின்றன; கூறிய அகச்சான்று எதிலும், அவ் வீரர், கோசர் என ஓரிடத்தும் கூறப்படா மை காண்க. ஆக, களிறு எறிதல் ஒன்றைக் கொண்டு தழும்பன் கோசர் குலத்தவன் எனக் கொள்வதும் பொருந் தாது. எனவே, ஊணுணர்த் தழும்பன் ேகா சர் மரபினன் என்பதற்குத் திருவாளர். ரா. இராகவையங்கார் அவர்கள் 93