பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப் பாக்களையே, துணையாகக் கொண்டு ஆதன் எழினி கோசர் இனத்தவன் ஆவன் என்பவர் வரலாற்று ஆய்வாளர் சிலர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1951ல் வெளியிட்ட கோசர் என்ற தலைப்பிட்டத் தம் சிற்றாராய்ச்சி நூலில் திருவாளர் ரா. இராகவையங்கார் அவர்கள், "இதன் (அகம் 216) கண், கோசர் கண்ணியயரும் செல்லிக் கோமான் ஆதனெழினி என்பதனால் இவன் கோசர் தலைவனாகக் கருதப்பட்டான் எனக் கூறியிருப் பது காண்க. ஆதன் எழினி என்ற இவன் பெயரில் இரு பெயர்ச்சொற் கள் இடம்பெற்றுள்ளன. 'ஆதன்' என்பது ஒன்று, 'எழினி என்பது இரண்டு. இவற்றுள் ஆதன் எனும் சிறப்படைப் பெயர் உடை யார் பலராவர். வாழி ஆதன் வாழி அவினி', வாட் உாற்று ஒழினி ஆதன், நெடு வேள் ஆதன், ஆதன் அழிசி" ஆதன் நுங்கன்'. ஆதன் ஓரி'9. இமயவரம்பன் நெடுஞ் சேரல் ஆதன் 19 செல்வக் கடுங்கோ வாழி ஆதன் ஆடு கோட்பாட்டுச் சேரல் ஆதன் குடக்கோ நெடுஞ்சேரல் ஆதன்' ஆக ஆதன் எனும் பெயரினைத் தாங்கிநிற்பார் பதின்மர் உள்ளனர். * - மேலும், ஆதன்' எனும் பெயர் சேரர் குலத்தவர்க்கே உரிய பெயர் என்பதும் தெளிவாக்கப்பட்ட ஒன்று. ஆகவே "ஆதன் எழினி, ஒருவகையில் சேரர் குலத்தவரோடு தொ டர்புடையவன் எனக் கொள்ளலாமே ஒழிய, அவனைக் கோசர் குலத்தவன் என்பதற்கு, அவன் பெயரில் இடம் பெற்றிருக்கும் 'ஆதன்' என்பதே பெருந்தடையாகவும் நிற்கிறது. . 99