பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கோசர்க்கும் மோகூர்ப் பழையனுக்கும் உள்ள உறவு பற்றி வரலாற்றுத் திறனாய்வார் கூறும் கருத்துக்கள் 1. நாவலர். ந. மு. வேங்கடசாமி நாட்டார். கரந்தைக் கவியரசு ரா வேங்கடாசலம் பிள்ளை ஆகியோரின் கருத்து : பாகனேரி, த. வை. இளைஞர் தமிழ்ச் சங்க வெளியீடாக 1943-ல் வெளியிடப்பட்ட அகநானூறு - விளக்கவுரை விளக்கத்தில், அகம் 251-ஆம் பாட்டு உரையில் * வெல்லும் கொடியினையுடைய விரையும் காற்றை ஒத்த அணி செய்யப் பெற்ற தேரினையுடைய கோசர் என்பா, மிக்க தொன்மை வாய்ந்த ஆலமரத்தின் அரிய கிளைகளை யுடைய மன்றத்தே இனிய ஒசையையுடைய முரசம் குறுந்தடியால் அடிக்கப்பெற்று ஒலிக்க, பகைவரது போர்முனை யை அழித்த காலத்தே, மோகூர் என்பான் பணிந்து வாரா மையின், அவன் பால் பகை ஒரட்டுக் கொண்டவராகிய குதிரைகள் பொருந்திய சேனையினையுடைய புதிய மோரியர் ' என உரை கூறிய் நாவலர் நாட்டார்.அவர்களும் கரந்தைகவியரசு அவர்களும், விளக்கவுரையில், :மோகூர் மன்னன் கோசர்க்குப் பணியாமையினாலே, கோசர்க்குத் துணையாய் வந்த மோரியர் ' என்றும் கூறியுள்ளனர். 2. திருவாளர். ரா. இராகவையங்கார் அவர்களுடைய கூற்று : திருவாளர், ரா. இராகவையங்கார் அ வ ர் க ள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1951-ல் வெளியிட்ட, “ கோசர் “ என்ற தம் நூலில், மதுரைக் காஞ்சியுள், பழையன் மோகூர் அவையகம் விளங்க, நான் மொழிக் கோசர் தோன்றியன்ன என க் கூறுதலால், மோகூர் மன்னனாகிய பழையனுக்கும் கோசருக்கும் ஒரு தொடர்புண்ம்ை புலப்படுவது. இல்லையேல், இவன் மோகூர் 1