பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கொங்கர் கோசரா ? தமிழ் நாட்டில் பிறந்தும், வளர்ந்தும், பேரரசர்களாய், குறுநில மன்னர்களாய், கொடை வள்ளல்களாய், பேராண் "மை மிக்க பெருவீரராய் வாழ்ந்தோர் பலர் . அவர்கள் வாழ்ந்த தமிழகத்தில் கொங்கர், கோசர், தொண்டையர், பூழியர், மழவர், வடுகர், வேளிர் போலும் மறவர் இன மக்க ளும் வாழ்ந்திருந்தனர், அவர்களுள் கொங்கர் பற்றி தமிழ நூல்கள் கூறுவன இவை ; கொங்கு நாடு : சேரர் பேரரசு நிலவிய நாடு, பொதுவாகச் சேர நாடு என்ற பெயரால் அழைக்கப் பெற்றதாயினும் அது பிரிவில் லாப் பெரு நாடாக என்றும் விளங்கியது. இல்லை. சில பல உள் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரு நாடாகவே அது இருந்து வந்துளது. அத்தகைய உள் நாடுகளுள் கொங்கு நாடும் ஒன்று. கோவை மாவட்டமும், சேலம் மாவட்டத்தின் தென் பகுதியும் கொண்ட நாடே, பண் டு கொங்கு நாடு என அழைக்கப் பெற்றது. கொங்கர் வாழ் வால் அந்நாடு அப்பெயர் பெற்றது. கொங்கரும் ஆனிரை ஓம்பலும் : கொங்கர் ஆனிரை போற்றும் அருந்தொழில் மேற் கொண்டு வாழ்ந்தனர். கொங்கு நாடு நீர் வளம் அற்ற வன்னிலமே நிறைந்த மேட்டு நிலம். அதன. ல், தம் 107