பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பொன் செய் கணிச்சித் திண் பிணி உடைத்துச் சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல் கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும் ஆ கெழு கொங்கர் நாடு’’’ -பாலைக் கெளதமனார் கொங்கர் தம் ஆற்றல் : ஆனிரை ஓம்பும் அருள் உள்ளம்உடையராய கொங்கள் தம் ஆனிரைச் செல்வத்தைக் கவர்ந்து கொள்ளவருவாரும் இருப்பர். சிலர், ஒரோ வழி கவர்ந்து சென்று அவர் தம் அரண கத்தே அடைத்து வைப்பாரும் இருப்பர், என அறிந்து, அத்தகு செயல்கள் நிகழாவண்ணம் காத்துக் கொள்ளவல்ல வெற்றி வீரராகவும், அதற்குத் துனண புரியவல்ல வாட்படை உடையராகவும், பகைவம் தம் பேர ரண்களைப் பாழ் படுத்துமாறு, பெரும் பெரும் கற்களைத் தாமே எறிய வல்ல கல் கால் கவணை எனும் படைப் பொறிகளை உடையராகவும் விளங்கினர். இவற்தை அறிவிப்பன கீழ்வரும் பாடல்கள். 'ஒளிறுவாள் கொங்கர்’4 - பரணர் ஆரெயில் அலைத்த கல்கால் கவனை நாரரி நறவின் கொங்கர்" - பெருங்குன்றுார் கிழார் கொங்கரின் பகைவர்கள்: இவ்வாறு, ஆனிரைச் செல்வமும், ஆற்றல் பெருமை யும் கொண்ட கொங்கர் வாழும் நாடு, சேரநாட் 109