பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கரை வெற்றி கொண்ட சோழ வேந்தர் : கொங்கரைக் கொன்று களங்கொண்ட சோழ வேந்தர் இருவராவர்; ஒருவன் கிள்ளி வளவன்; மற்றொருவன் செங்கணான், கி ஸ் வளி வளவன், கொங்கரை வெற்றி கொண்ட வீறாண்மையை ப் புலவர் கோவூர் கிழார், "கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே எனப்பாராட் டி புள்ளார். சோழன் செங்கணானும், கணையன் எனவும் அழைக் கப் பெறும் சேரமான் கணைக்கால் இரும் பொறையும் பகைவர்; அக் காலை, கொங்கர் சேரரோடு சேர்ந்து வாழ்ந்து வந்தனர். மேலும் கொங்கர் படையொன்றும் கணையனுக்குத் துணை நின்றது. அதனால் செருக்குற்ற அவன், சோணாட்டின் மீது போர் தொடுக்கத் திட்டமிட் டான்; அதை அறிந்தான், அக் காலை சோழர் அரியணை யில் வீற்றிருந்த செங்கணான்; உடனே, தன் படைத் தலைவர்களுள் சிறந்தோனும், போ ஓர் எனும் ஊருக்கு உரியோனும் ஆகிய பழையன் என்பானை, சேரர் அணி யைச் சிதறடித்து வருமாறு போக்கினான். சேர நாட்டைச் சேர்ந்த கழுமலம் எனும் இடத்தே போர் நடந்தது; பழையன், ஒரே பகலில், கணையன் படைத் தலைவர்களாய்க் கூடியிருந்த நன்னன், ஏற்றை, அத்தி கங்கன், கட்டி, புன்றுறை முதலாய அறுவரையும் அழித்தான். ஆயினும் ஏன்? இறுதியில் கொங்கர் படை யால் களத்தில் மாண்டான். தன் படைத்தலைவன் பழை யன் மாண்டான் என்பதறிந்த செங்கணான், தானே களம் புகுந்து, கொங்குப் படையையும் அழித்து, கணையனை யும் சிறை செய்து கொண்டு சென்றான். கழுமலம் போர்க் காட்சிகளைக் காட்டுவன கீழ்வரும் பாடல்கள்: 111