பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கொற்றச் சோழர், கொங்கர் பணி இயர், வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன் பழையன் வேல் வாய்ந்தன்ன 10 - பெயர் அறியாப் புலவர் 'நன்னன், ஏற்றை நறும் பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன், கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு அன்றவர் குழிஇய அளப்பருங் கட்டுர்ப் பருந்து படப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது நோனான் ஆகித், திண் தேர்க் கணையன் அகப்படக் கழுமலம் தந்த பிணையல் அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி'11 - குடவாயில் கீரத்தனார் "கவளம் கொள் யானையின் கைதுணிக்கப்பட்டுப் பவளம் சொரிதரு பைபோல்-திவள் ஒளிய ஒண்செங் குருதி உமிழும் புனல் நாடன் கொங்கரை அட்டகளத்து12 - - பொய்கையார் கொங்கரை வெற்றி கொண்ட பாண்டியன் : கொங்கரால், தன் அரச வாழ்விற்கே அழிவுண்டாகி விடுமோ என அஞ்சினான் பசும்பூண் பாண்டியன் அதனால் அவர்களை, அவர்களின் கொங்கு நாட்டிலிருந்தே துரத் தத் துணிந்தான். உடனே, தன் படைத் தலைவர்களுள் ஒருவனாகிய அதியன் என்பான் பால் அப்பொறுப்பினை ஒப்படைத்தான். அதியனும், கொங்கு நாடு புகுந்து, கொங்கரை வென்று, அவர் நாட்டையும் கைப்பற்றி மீண் டான். இவ்வகையால் கொங்கரை வெற்றி கொண்ட 112