பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதியன், பிற்காலத்தே, வாகை எனும் இடத்தில் நடந்த போர் ஒன்றில் உயிர் துறந்தான். தம்மை வென்று விரட் டிய அதியனின் அழிவு கேட்ட கொங்கர் களி பேருவகை பூத்தனர். இவ் வரலாறு உணர்த்துவன வரும் பாக்கள் : 'கொங்கர் ஒட்டி நாடு பல தந்த பசும்பூட் பாண்டியன் ே - நக்கீரர் "கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும் பூட்பாண்டியன் வினை வல் அதியன் களிறொடு பட்ட ஞான்றை ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே' - பரணர் கொங்கரைக் குடகடல் ஒட்டிய ஆய் அண்டிரன் : கொங்கரின் படைவன்மை கண்டு அஞ்சினார், மூவேந் தர் மட்டும் அன்று; குறுநில மன்னர் சிலரும் அஞ்சினர்; அவர்களுள் ஒருவனாகிய ஆய் அண்டிரன், அக் கொங் கரை வெற்றி கொண்ட தோடு அமையாது, அவர்களை மேலைக் கடற்கரை நோக்கி ஓடுமாறு வெற்றி கொண்டு, அவ்வாறு ஒடுங்கால், அவர்கள் களத்தே போட்டு விட்டுச் சென்ற வேற்படை முதலாம் படைக் கலங்களையும் கைப் பற்றிக் கொண்டான் இச் செய்திக்குச் சான்று பகர்வது : 'கொங்கர்க் குட கடல் ஒட்டிய ஞான்றைத் தலைப் பெயர்த்திட்ட வேலினும் பலவே'ல் என்ற உறையூர் ஏணிச் சேரிமுட மோசியார் பாடலாகும். கொங்கர் கோசரா? மேலே எடுத்து வைத்த பதினொரு பாடல்களும், அப் பாடல்களைப் பாடிய, குடவாயில் கீரத்தனார், அரிசில் 113