பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழார், பாலைக் கெளதமனார், பரணர், பெருங்குன்று ர் கிழார், பொய்கையார், நக்கீரர், உறையூர், ஏணிச்சேரி முட மோசியார், ஆகிய புலவர் எண்மர், பெயர் அறியாப் புலவர் ஒருவர் ஆகிய ஒன்பது புலவர்களும், அளிக்கும் கொங்கர் வரலாறு இத் துணையவே. மேலே எடுத்து வைத்த அகச் சான்றுகள் அனைத்தும், கொங்கர் என்ற இனத்தவர், கோசர், தொண்டையர், பூழியர், மழவர், வடுகர், வேளிர், என்ற வேறு இனத் தவர்கள், போலவே, அவர்களின் வேறுபட்ட தனிஇனத் தவர் என்பதையே வலியுறுத்துவனவாகவும், திருவாளர். இரா இராகவையங்கார் அவர்கள் மட்டும், இவர்கள் கோ சரின் வேறுபட்டவர் அல்லர்; கொங்கர் எனப் பிரித்துக் கூறப்பட்டாலும், கோசர் இனத்தவரே; கொங்கர், கோசர் என்பன இரண்டும், கோசர் என்ற ஓர் இனத்தவரையே குறிக்கும் என்கிறார், - அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1951ல் வெளி யிட்ட, கோசர் என்ற தம் சிற்றாராய்ச்சி நூலின் முதல் பக்கத்திலேயே தி ரு வா ள ர். ரா. இராகவையங்கார் அவர்கள், - கொங்கிளங் கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழில் என்றும் மாறாதாயிற்று 16 என்ற சிலப்பதிகார வரிகளை எடுத்தாண்டு விட்டு என்புழி, அரும்பதவுரைகாரர், கோசரைக் குறும்பு செலுத்துவார் சில வீரர் எனவுரைத்தார். அடியார்க்கு நல்லார் ஈண்டுக் கொங்கு மண்டலத்து இளங்கோவாகிய கோசர் என்று கருதி மொழிந்தனர். அரும்பதவுர்ைகாரர் குறும்பு செலுத்துவார் என்றது' சிறிய அரண்களில் ஆட்சி 114